National Film Awards 2023: கடைசி விவசாயி முதல் ஹோம் வரை... மாநில வாரியாக தேசிய விருதை வென்ற சிறந்த படங்கள்!
சிறந்த படங்களுக்கான தேசிய விருது வென்ற படங்களை மாநில வாரியாக பார்க்கலாம்
2021-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே தமிழ் சினிமாவை பொறுத்தவரை பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் நடிகர் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை, சூர்யா மற்றும் மணிகண்டன் நடித்த ஜெய் பீம், தனுஷ் நடித்த கர்ணன், சமுத்திரக்கனி இயக்கிய விநோதய சித்தம் மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு ஆகிய திரைப்படங்கள் தேர்வாகியிருந்தன. ஆனால் இதில் எந்த திரைப்படமும் தேசிய விருது பட்டியலில் தேர்வாகாவில்லை என்பது சோகமான செய்தி.
இந்நிலையில், மாநில வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய விருத்துக்கான சிறந்த திரைப்படங்கள் என்ன என்று பார்க்கலாம்.
சிறந்த தமிழ் திரைப்படம்
தமிழில் சிறந்த திரைப்பத்திற்கான விருதை கடைசி விவசாயி திரைப்படம் வென்றுள்ளது. காக்கா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கி விஜய் சேதுபதி நடிப்பில் உருவானது கடைசி விவசாயி திரைப்படம்.
சிறந்த மலையாளத் திரைப்படம்
சிறந்த மலையாளத் திரைப்படத்திற்கான விருதை ஹோம் திரைப்படம் வென்றது. ரோஜின் பி தாமஸ் இயக்கி ஃப்ரைடே ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடட் இந்தப் படத்தை தயாரித்தது.
சிறந்த இந்தி திரைப்படம்
சிறந்த இந்தி திரப்படத்திற்கான விருதை விக்கி கெள்ஷல் நடித்த சர்தார் உத்தம் சிங் வென்றுள்ளது. பிக்கு படத்தை இயக்கிய சுஜித் சர்கார் இந்தப் படத்தை இயக்கி கினோ வர்க்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
சிறந்த கன்னடத் திரைப்படம்
சிறந்த கன்னட திரைப்படத்திற்கான விருதை நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடித்த சார்லீ 777 படம் வென்றுள்ளது.
சிறந்த தெலுங்கு திரைப்படம்
சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்கான விருதை உப்பன்னா படம் வென்றுள்ளது. சனா புஜ்ஜிபாபு இயக்கி மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
சிறந்த அஸ்ஸாமீயத் திரைப்படம்
சிறந்த அஸ்ஸாமீயத் திரைப்படத்திற்கான விருதை மொஞ்சூல் பருவா இயக்கிய ’அனுர்’ திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த பெங்காலித் திரைப்படம்
சிறந்த பெங்காலி திரைப்படத்திற்கான விருதை ராஜ்தீப் பால் சர்மிஸ்தா மைதி இயக்கிய ’கால்கோக்கோ’ படம் வென்றுள்ளது.
சிறந்த குஜராத்தி திரைப்படம்
பான் நலின் இயக்கி ஜுகாட் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ’த லாஸ்ட் ஃபில்ம் ஷோ( the last film show) ‘ திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த மராத்திய திரைப்படம்
சலீல் ஸ்ரீனிவாஸ் குல்கர்னி இயக்கிய ’எகடா கே ஜாலா’ என்கிற படம் சிறந்த மராத்திய மொழித் திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது.
சிறந்த ஒரியத் திரைப்படம்
அனுபம் பட்னாயக் இயக்கிய ’பிரதிக்ஷ்யா’ சிறந்த ஒரியத் திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது.