Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!
சட்டமன்ற தேர்தலுக்குள் கொங்கு மண்டலத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர, அமைச்சர் செந்தில் பாலாஜியை மீண்டும் சிறைக்கு அனுப்ப அண்ணாமலை பக்கா ஸ்கெட்ச் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலையும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதோடு இருவரும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே கொங்கு மண்டலத்தை யார் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என்ற போட்டி இருந்துவருவதாக கூறப்படுகிறது. அண்ணாமலையின் வளர்ச்சிக்கு செந்தில் பாலாஜி கடும் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இச்சூழலில் தான் கடந்த வருடம் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 471 நாட்கள் அவர் சிறையில் இருந்தார். கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ஆம் தேதி தான் ஜாமினில் வெளியே வந்தார். ஜாமினில் வெளியே வந்த உடனே அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. செந்தில் பாலஜிக்கு அமைச்சர் பதவி உடனே வழங்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு அதிமுக, நாம் தமிழர் , பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகளும் தங்களுடைய எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்தன. ஆனாலும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதில் எந்த சிக்கலும் இல்லை என்று திமுக தலைமை நினைப்பதாக தகவல் வெளியானது.
இச்சூழலில் தான் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியால் கொங்கு மண்டலத்தில் தன்னுடைய அரசியல் செல்வாக்கு குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாக அண்ணாமலை நினைக்கிறாராம். கொங்கு மண்டலத்தில் பாஜகவிற்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறது. அதிமுகவிற்கு அடுத்த இடத்தில் பாஜக இருந்தாலும் செந்தில் பாலஜி மீண்டும் வந்து இருப்பதால் திமுகவிற்கு வளர்ச்சிக்கு அவர் உறுதுணையாக அவர் இருப்பார் என்பதால் தன்னுடைய வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று அண்ணாமலை நினைப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு விசாரணையை துரிதப்படுத்தக் கோரி, அவரால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரணையின்போது ஒரு முக்கியமான வாதத்தை எடுத்து வைத்தனர். அமைச்சராக பதவியில் இல்லை என கூறி ஜாமீன்பெற்ற செந்தில் பாலாஜி, தற்போதுஅமைச்சராக பதவியில் உள்ளார். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்தவுடன் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே, செந்தில் பாலாஜியின் ஜாமீனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
இச்சூழலில் தான் கடந்த இரண்டு தேர்தல்களில் தோல்வி அடைந்த அண்ணாமலை 2026 சட்டமன்ற தேர்ததில் கொங்கு பகுதியில் நின்று வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பதாகவும் செந்தில் பாலஜி வெளியில் இருந்தால் வெற்றி பெறுவது கடினம் என்று அண்ணாமலை நினைப்பதாக கூறப்படுகிறது. இதனால் 2026 சட்டமன்ற தேர்தலுக்குள் கொங்கு மண்டலத்தை எப்படியும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்றும் செந்தில் பாலாஜியை மீண்டும் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் பக்கா ஸ்கெட்ச் போட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு டெல்லி பாஜகவும் அவருக்கு உறுதுணையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.