அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு நன்றி தெரிவித்துள்ளார்.
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ்ச்செல்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற சாதனை படைத்ததற்கு வாழ்த்துக்கள் என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அண்டார்டிகாவின் மிக உயரமான மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ்ப் பெண் என்ற சாதனையை முத்தமிழ்ச்செல்வி படைத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி ஒன்றியம் ஜோகில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி என்ற பெண் இந்த சாதனையை படைத்துள்ளார். எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் தமிழ் பெண் என்ற சாதனையையும் படைத்தவர் முத்தமிழ்ச்செல்வி. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ்ப் பெண் என்ற சாதனை படைத்த நிலையில் தற்போது அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் முத்தமிழ்ச்செல்வி.
உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில் “எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் தமிழ் பெண் என்ற சாதனை படைத்த விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியம் ஜோகில்பட்டியைச் சேர்ந்த திருமிகு. முத்தமிழ் செல்வி, உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தற்போது, அண்டார்டிக்காவின் மிக உயரமான மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற பெரும் சாதனையைப் படைத்துள்ளார். அவர் இதுபோன்ற பல சாதனைகளைப் படைத்திட மனமார்ந்த வாழ்த்துகள்!
எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் தமிழ் பெண் என்ற சாதனை படைத்த விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியம் ஜோகில்பட்டியைச் சேர்ந்த திருமிகு. முத்தமிழ் செல்வி, உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தற்போது, அண்டார்டிக்காவின் மிக உயரமான… pic.twitter.com/c1eYZtfkcE
— Thangam Thenarasu (@TThenarasu) December 24, 2024
இந்திய ஒன்றியத்தின் முன்னோடி மாநிலமாக எல்லாத் துறைகளிலும் தமிழ்நாடு சிறந்து விளங்கிட, பெரும் பணியாற்றி வரும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.