மேலும் அறிய
Advertisement
Rasipalan December 25: கும்பத்திற்கு அதிக செலவு; மீனத்திற்கு நண்பர்களின் ஆதரவு- உங்க ராசி பலன்?
Rasi Palan Today, December 25: இன்று மார்கழி மாதம் 10ஆம் நாளில், எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today December 25, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல்கள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
ரிஷப ராசி
பெற்றோரிடம் மனம் விட்டு பேசுவீர்கள். உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பயணங்கள் மூலம் அனுகூலங்கள் பிறக்கும். பாசம் நிறைந்த நாள்.
மிதுன ராசி
வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். கற்பனைத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.
கடக ராசி
அரசு தொடர்பான செயல்களில் ஆதாயம் அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். வாகன மாற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். மேல்நிலைக் கல்வியில் தெளிவுகள் பிறக்கும். சக ஊழியர்களால் அனுகூலம் ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
சிம்ம ராசி
சிந்தனைப் போக்கில் தெளிவுகள் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். வியாபார பணிகளில் மாற்றமான சூழல்கள் உருவாகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். சிறு தூர பயணம் மூலம் மாற்றம் பிறக்கும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். நட்பு மேம்படும் நாள்.
கன்னி ராசி
குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தனவருவாயிலிருந்து வந்த இழுபறிகள் குறையும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆபரணங்கள் சேர்க்கை அதிகரிக்கும். எதிர்பாராத சில அறிமுகங்கள் மூலம் புதுமையான சூழல் உருவாகும். கொடுக்கல், வாங்கலில் லாபம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
துலாம் ராசி
உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். மற்றவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். குணநலன்களில் சில மாற்றம் உண்டாகும். துணைவருடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவுகள் பிறக்கும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். தூர தேச பயண சிந்தனைகள் மேம்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். புகழ் மேம்படும் நாள்.
விருச்சிக ராசி
வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பம் உண்டாகும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடிவு பெறும். சுப செய்திகள் மூலம் சேமிப்புகள் குறையும். ஆதரவு நிறைந்த நாள்.
தனுசு ராசி
கலைத்துறைகளில் ஆர்வம் உண்டாகும். எதிர்காலம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயணம் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். மூத்த உடன் பிறப்புகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். மேன்மை நிறைந்த நாள்.
மகர ராசி
வியாபாரம் நிமித்தமான பயணங்கள் கைகூடும். தனித்து செயல்படுவது தொடர்பான சூழல் அமையும். அரசுப் பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் பேராசை இன்றி செயல்படவும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நிம்மதி நிறைந்த நாள்.
கும்ப ராசி
தந்தை வழி உறவுகள் மூலம் ஒத்துழைப்பு உண்டாகும். நீண்ட தூர பயண சிந்தனைகள் உண்டாகும். குருமார்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான சில விரயம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.
மீன ராசி
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிவட்டார நண்பர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion