12 ஆண்டுகளுக்குப் பின் விருது வாங்கும் மைனா... பலரின் வாழ்வை மாற்றிய திரைப்படம்!
Mynaa : 2010ல் வெளியான சிறந்த காதல் திரைப்படமான மைனா அந்த ஆண்டிற்கான சிறந்த படத்திற்கான தமிழ்நாடு அரசு விருதுகளில் முதலிடத்தை பெற்றது.
Mynaa movie : தமிழ்நாடு அரசு விருதுகள் - முதலிடத்தை பெற்ற மைனா திரைப்படம் ஒரு பார்வை...காதலின் ஆழத்தை உணர்த்திய திரைப்படம்
பிரபு சாலமன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான ஒரு அருமையான காதல் திரைப்படம் ' மைனா' . தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான திரைக்கதை மற்றும் கதைக்களம் கொண்டு படத்தை இயக்கும் சில இயக்குனர்களில் முன்னோடி பிரபு சாலமன்.
எதார்த்தமான நடிப்பு :
மைனா திரைப்படம் 2010ம் ஆண்டு சிறந்த படத்திற்கான தமிழ்நாடு அரசு விருதை 'மைனா' திரைப்படம் முதல் பரிசை தட்டி சென்றுள்ளது. படத்தில் நடித்த நடிகர் வித்தார்த், அமலாபால், தம்பி ராமையா என அனைவரின் நடிப்பும் வெகு சிறப்பாக அமைந்து இருந்தது. குறிப்பாக இப்படம் இயக்குனர் பிரபு சாலமானிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஆண்களை மையமாக வைத்து படம் எடுக்கும் படங்களுக்கு மத்தியில் பெண்களை மையமாக வைத்து படம் எடுக்க துணிந்தவர். ஒரு நாளில் நடைபெறும் கதையை மிக சிறப்பாக படமாக்கியிருந்தார். இசையமைப்பாளர் இமானின் பாடல்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது.
முதலில் தேர்வு செய்யப்பட்ட நடிகர்:
பிரபு சாலமன் நிலம் மற்றும் நிலம் சார்ந்த இடங்களை பிரதிபலிப்பதில் வல்லவர். அதற்கு சாட்சி அவரின் மைனா மற்றும் கும்கி திரைப்படங்கள். இந்த படத்தின் மூலம் வித்தார்த் ஹீரோவாக அறிமுகமானார். முதலில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க தேர்வு செய்யப்பட்டவர் கழுகு, மாரி 2 யாமிருக்க பயமேன் உள்ளிட்ட படங்களில் நடித்த கிருஷ்ணா. இவர் இயக்குனர் விஷ்ணு வரதனின் தம்பி. இயக்குனர் பிரபு சாலமனிடம் கதையை சொல்லச்சொல்லி கேட்டதற்கு அவர் நாளை வருகிறேன் என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாராம். அடுத்த நாளே படத்திற்கு ஹீரோ வித்தார்த் என முடிவெடுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ஒரு நேர்காணலின் போது நடிகர் கிருஷ்ணா கூறியது.
#10YearsOfMynaa
— D.IMMAN (@immancomposer) November 5, 2020
A Film which gear shifted the lives of many! Mynaa is very close to my heart for various reasons! Sincere thanks to Director Prabusolomon n Producer JohnMax for making Mynaa’s journey memorable! #DImmanMusical
Praise God! pic.twitter.com/6qR6Q5aQuJ
அமலாபாலின் அசாதாரணமான நடிப்பு:
பலரும் அறியாத ஒரு தகவல் என்னவென்றால் அமலாபால் அறிமுகமான முதல் திரைப்படம் 'சிந்து சமவெளி'. இப்படத்தில் நடித்ததன் மூலம் பெரும் சர்ச்சையில் சிக்கினார் அமலாபால். இருப்பினும் 'மைனா' படத்தில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர். முதலில் பிரபு சாலமன் அமலாபாலின் நீளமான கண்களைப் பார்த்து தான் அவரை தேர்வு செய்துள்ளார். அனால் அவர் அதற்கு முன்னர் 'சிந்து சமவெளி' படத்தில் நடித்தது இயக்குனருக்கு தெரியாதாம். போலீஸ் அதிகாரியின் மனைவியாக நடித்த சூசனின் நடிப்பும் மிகவும் பிரமாதமாக இருந்தது.
2009-14 Tamil Nadu film awards announced!! Award winners list here!!https://t.co/MVQHXVDMMP #TamilNadufilmawards pic.twitter.com/MZUAfpcnXE
— Kalakkal Cinema (@kalakkalcinema) July 14, 2017
ஒலிப்பதிவாளர் சுகுமாரின் கைவண்ணம்:
மைனா படத்தின் ஒலிப்பதிவாளர் சுகுமார் பாராட்டிற்குரியவர். கேரளா மாநிலத்தின் எல்லையையான குரங்கிணி கிராமம் அதன் உயரமான மலை, அப்பாவியான மக்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைமுறையை அழகாக வெளிச்சம் போட்டி காட்டியவர். சுகுமார் - பிரபு சாலமன் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் கண்களுக்கு விருந்தளித்தன. அறியப்படாத முகங்களை வைத்து ஒரு சிறப்பான திரைக்கதையை அமைத்ததன் மூலம் ரசிகர்களுக்கு ஒரு உண்மையான உணர்வை கொண்டுவந்தார். கமர்ஷியல் மற்றும் மசாலா படங்களால் அலுத்து போன ரசிகர்களுக்கு ஒரு சுத்தமான காற்றாக வீசியது மைனா திரைப்படம்.