![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Cinema Headlines: உற்சாகமாக வாக்களித்த பிரபலங்கள்: மோகன்லால் - ஷோபனா இணையும் 56வது படம்: சினிமா செய்திகள்!
Cinema Headlines: சினிமா வட்டாரத்தில் இன்று நடைபெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்துப் பார்க்கலாம்.
![Cinema Headlines: உற்சாகமாக வாக்களித்த பிரபலங்கள்: மோகன்லால் - ஷோபனா இணையும் 56வது படம்: சினிமா செய்திகள்! cinema headlines 19th april 2024 tamil cinema news MohanLal Shobana Vijay Rajinikanth Suriya Trisha Cinema Headlines: உற்சாகமாக வாக்களித்த பிரபலங்கள்: மோகன்லால் - ஷோபனா இணையும் 56வது படம்: சினிமா செய்திகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/19/a80aeb3dcc29f8a7f40b11400807f3b61713526983131574_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
56வது முறையாக இணையும் மோகன்லால் - ஷோபனா கூட்டணி.. ரசிகர்கள் உற்சாகம்!
தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் 80கள் தொடங்கி பிரபல நடிகையாக இருப்பவர் நடிகையும் டான்சருமான ஷோபனா. இவர் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் உடன் ஏற்கெனவே 55 திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது 56ஆவது படத்தில் இருவரும் இணைய உள்ளனர். நடிகை ஷோபனா இதுவரை பல மொழிகளில் 230 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது மோகன்லாலின் 360ஆவது படத்தில் ஷோபனா தற்போது நடிக்க உள்ளார்.
இதுவரை மக்களவை தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள் யார்? யார்? - முழு விபரம் உள்ளே!
2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் ஜனநாயக கடமையை உற்சாகமாக நிறைவேற்றிச் சென்றுள்ளனர். நடிகர் அஜித் இன்று திரைப்பிரபலங்களில் முதல் ஆளாக வந்து வாக்கு செலுத்திய நிலையில், நடிகர்கள் ரஜினிகாந்த், தனுத், விஜய் சேதுபதி, கமலஹாசன், விஜய், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம் ரவி உள்ளிட்ட பலரும் வரிசையாக வந்து வாக்களித்துச் சென்றுள்ளனர்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.. முதல் ஆளாக வாக்களித்த அஜித்..!
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் நடிகர்களில் முதல் ஆளாகச் சென்று அஜித் வாக்களித்துள்ளார். காலை 7 மணிக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூரில் பாரதிதாசன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு காலை 6.40 மணிக்கே அஜித் வருகை தந்து விட்டார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற நடிகர் சூரி சொல்வது என்ன?
18ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற தனது பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுப் போயுள்ளதாக நடிகர் சூரி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். “என்னுடைய ஜனநாயக கடமையை செய்ய நான் வாக்களிக்க வந்தேன் , ஆனால் என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் விட்டுப்போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இந்த தவறுக்கு யார் காரணம் என்று தெரியவில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.
"எவ்வளவோ கெஞ்சினேன்.." படம் எடுப்பதையே நிறுத்திய சமுத்திரகனி.. என்ன காரணம் தெரியுமா?
கடந்த 2003 ஆம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்தவர் சமுத்திரக்கனி. தொலைக்காட்சியில் தன் பயணத்தைத் தொடங்கி சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பன்மொழித் திறமையாளராகக் கலக்கி வருகிறார். இந்நிலையில், தனக்கு படம் எடுக்கும்போது இருக்கும் மகிழ்ச்சி, ரிலீஸ் ஆகும்போது இல்லை என சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)