கருணாஸ் கருணாகரன் காம்போவில் உருவாகும் சுந்தரா டிராவல்ஸ் 2...
வடிவேலு முரளி நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது

சுந்தரா டிராவல்ஸ்
முரளி வடிவேலு கூட்டணியில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். இப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றும் வயிறு வலிக்கும் அளவு சிரிக்க வைக்கக் கூடியவை. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது . சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட் என இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சுந்தரா டிராவல்ஸ் 2
முதல் பாகத்தில் முரளி வடிவேலு நடித்திருந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தில் நடிகர் கருணாஸ் மற்றும் கருணாகரன் ஆகிய இருவர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆடுகளம் முருகதாஸ் , சாம்ஸ் , விக்னேஷ் , அஞ்சலி , செவந்த் சென்ஸ் நாராயணன் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். கறுப்பு தங்கம் இப்படத்தை இயக்கும் நிலையில் ஹரிஹரன் இசைமைக்கிறார். செல்வா ஒளிப்பதிவு செய்கிறார்.
பஸ் தான் ஹீரோ
சுந்தரா டிராவல்ஸ் படம் குறித்து படத்தின் இயக்குநர் கறுப்பு தங்கம் இப்படி கூறியுள்ளார் " இப்படத்தில் பஸ்தான் ஹீரோ. அதற்காக ஒரு பஸ் விலைக்கு வாங்கி அதை படத்திற்கு ஏற்றார்போல் தயாரி செய்திருக்கிறோம். கொடைக்கானல் , பன்றிமலை போன்ற அடைவனப் பகுதிகளிலும் தென்காசி , காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க : 25 வருடத்திற்கு பிறகு அஜித்துடன் இணையும் நடிகை...குட் பேட் அக்லி படத்தில் செம குத்தாட்டம்
25 நிமிடம் விளம்பரம் ஓட்டிய பி.வி.ஆர் நிறுவனம்...லிஸ்ட் போட்டு நஷ்ட ஈடு வசூலித்த இளைஞர்
‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தின் 2வது பாகத்திற்கு ‘சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் ஃபாஸ்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது#sundaratravels #sundaratravels2 #sundaratravelssuperfast pic.twitter.com/oBFRhtlSlK
— ABP Nadu (@abpnadu) February 19, 2025





















