UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
UP Wedding: உத்தரபிரதேசத்தில் திருமண விழாவிற்கு வந்த இளைஞரை ஊரே சேர்ந்து கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
UP Wedding: உத்தரபிரதேசத்தில் இளஞரை திருடன் என நினைத்து ஊரே சேர்ந்து அடித்துள்ளது.
இளைஞர் மீது சரமாரி தாக்குதல்:
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து பக்கத்து பகுதியான தியோரியா மாவட்டத்திற்கு புதன்கிழமை இரவு நடந்த திருமண ஊர்வலம், தவறான திருட்டு குற்றச்சாட்டால் ஒரு மோசமான நிகழ்வாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ஒருநபரை திருடன் கருதி கிராம மக்கள் சேர்ந்து கம்பத்தில் கட்டிப்போட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடந்தது என்ன?
இந்த சம்பவமானது தியோரியாவின் தர்குல்வா கிராமத்தில் நடந்தது. அங்கு திருமணக் குழுவினர் உள்ளூர் திருமண மண்டபத்திற்கு வந்திருந்தனர். பங்கேற்பாளர்களில் ஒருவர், மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. எதிர்பாராத விதமாக அவர் தனது குழுவிலிருந்து பிரிந்து அலைந்து திரிந்து தனது வழியை இழந்தார். நள்ளிரவில், அந்த நபர் அந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். இதையடுத்து அவரைத் திருடன் என்று தவறாகப் புரிந்து கொண்ட உள்ளூர்வாசிகள், "திருடன், திருடன்" என்று கூச்சலிடத் தொடங்கியுள்ளனர்.
Video | UP Wedding Gone Wrong: Man Tied To Pole, Beaten Over Mistaken Identity
— NDTV (@ndtv) November 30, 2024
Read: https://t.co/zP1GTq33tq pic.twitter.com/cTSpUHBGrI
இதை கேட்டதும் ஒரு கூட்டம் விரைவாக அங்கு திரண்டது. மதுபோதையில் கதவை தட்டிய அந்த நபரை வலுக்கட்டாயமாக பிடித்து மின் கம்பத்தில் கட்டியுள்ளனர். பொதுமக்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல், தனது கட்டுகளை அவிழ்த்தும்படி தொடர்ந்து கத்தியுள்ளார். இதனால், உள்ளூர் மக்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். தாக்குதலின் போது, பல பார்வையாளர்கள் அந்த கொடூரமான நிகழ்வுகளை படம்பிடித்துள்ளனர். பின்னர் அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ள அது விரைவில் வைரலானது.
காவல்துறை விசாரணை:
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பலத்த காயம் அடைந்த நபரை கைப்பற்றினர். அவர் உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரது காயங்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. காலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தகவலறிந்து காவல் நிலையத்திற்கு வந்து அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அண்மையில் அதே பகுதியில் ஒரு திருட்டு சம்பம் அரங்கேறியதால், அதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அந்த நபர் மீது தாக்குதல் நடத்தியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.