Champions Trophy 2025:அதிரடியாக விளையாடுவாரா விராட் கோலி - புதிய சாதனைகளுக்கான வாய்ப்பு!
Virat Kohli - Champions Trophy 2025: சாம்பினஸ் ட்ராபியில் விராட் கோலிக்கு இருக்கும் சாதனை வாய்ப்புகள் பற்றி காணலாம்.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் ஸ்டார் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு புதிய சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணிக்கு விராட் கோலியின் அனுபவம் வாய்ந்த ஆட்டம் முக்கியத்துவம்வாய்ந்ததாக இருக்கும். நடந்து முடிந்த கிரிக்கெட் போட்டுகளில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விராட் பெரிதாக ஜொலிக்கவில்லை. இங்கிலாந்து எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மட்டும் 52 ரன் எடுத்திருந்தார். விராட் கோலியின் அதிரடி ஆட்டம் சாம்பியன்ஸ் ட்ராபியில் திரும்புமா என்பது கேள்வியாக இருக்கிறது. விராட் கோலி மீண்டும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பது ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி 2025 இல் விராட் கோலி முறியடிக்கக்கூடிய ஐந்து சாதனைகள்:
ODI கிரிக்கெட்டில் அதிவேகமாக 14,000 ரன்:
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 14,000 ரன்களை கடந்த வீரர் என்ற என்ற பெருமை விராட் பெற வாய்ப்புள்ளது. சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் ஒரு போடியில் 37 ரன் எடுத்தால் விராட் கோலி 14,000 ரன்களை கடந்து விடுவார். இப்போதுவரை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இலங்கை வீரர் குமார சங்கர்கரா ஆகியோர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் 350-வது இன்னிங்க்ஸ் 14 ஆயிரம் ரன்களை கடந்தார். சங்கர்கரா 378-வது இன்னிங்க்ஸில் இந்த சாதனையை படைத்தார். விராட் கோலி இதுவரை 378 இன்னிங்ஸ் விளையாடி உள்ளார். 297 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 13,963 ரன்கள் குவித்துள்ளார் கோலி.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த 3-வது வீரர்
விராட் கோலி, 2008, இலங்கைக்கு எதிரா போட்டியில் முதன்முதலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கினார். ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட், டி-20 என மூன்றிலும் 545 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் விளையாடியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபியில் குறைந்தபட்சம் 103 ரன்கள் எடுத்தால், அவர் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்குதள்ளி, அதிக ரன் எடுத்துவர் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறுவார்.
- சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 664 போட்டிகள் - 34357
- குமார சங்கர்கரா (இலங்கை) - 666 போட்டிகள் 28016 ரன்
- ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 668 போட்டிகள் -27483 ரன்கள்
- விராட் கோலி (இந்தியா) - 612 போட்டிகள் - 27381 ரன்
2009ல் இந்தியாவுக்காக சாம்பியன்ஸ் டிராபியில் அறிமுகமான கோலி, இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் 529 ரன்கள் எடுத்துள்ளார். விராட் கோலி 263 ரன்கள் எடுத்தால், அவர் முன்னாள் மேற்கிந்திய தீவுகள் கேப்டன் கிறிஸ் கெய்லின் 791 ரன்களின் சாதனையை முறியடித்து, போட்டி வரலாற்றில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை படைப்பார்.
சாம்பியன்ஸ் டிராபியில் அதிக அரைசதம்
விராட் கோலி இதுவரை விளையாடிய 13 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் 5 அரைசதங்கள் அடித்துள்ளார். இன்னும் இரண்டு அரை சதம் அடித்தால் அதிக அரைசதம் எடுத்தவர் என்ற சாதனையை முறியடிப்பார். ஷிகர் தவான் 10 போட்டிகளில் 6 அரைசதத்துடன் முதலிடத்தில் இருக்கிறார். ராகுல் டிராவ் 19 போட்டிகளில் 6 அரைசதம் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார். விராட் கோலி இரண்டு அரைசதம் எடுத்தால், 13 போட்டிகளில் 5 அரைசதம் இருப்பதை மாற்ற முடியும். பட்டியலில் முன்னேறுவார்.
அதிக ஐசிசி கோப்பைகளை பெற்ற வீரர்
சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா வெற்றி பெற்றால், அதிக கோப்பைகளை வென்றவர் என்ற பெருமையை விராட் கோலி பெறுவார். 2011-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி, 2024-ல் டி20 உலகக் கோப்பை, 2008-ல் U19 உலகக் கோப்பை ஆகியவற்றை விராட் கோலி வென்றிருக்கிறார். இந்த முறையும் கோப்பை வென்றால் அதிக முறை சாம்பியன்ஸ் பட்டம் பெற்ற வீரர் என்பதில் ரிக்கி பாண்டிங்கின் எண்ணிக்கையை சமன் செய்வார். ஆஸ்திரேலிய வீரரான ரிக்கி பாண்டிங், 1999, 2003, 2007 என மூன்று ஆண்டுகளிலும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைகள், 2006, 2009 ம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை வென்றுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

