Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி
நடிகை கீர்த்தி சுரேஷ் எப்போது திருமணம் செய்துகொள்வார் என்கிற நீண்ட நாள் கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் தனது திருமணத் தகவலை உறுதுபடுத்தியுள்ளார். கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலனை அடுத்த மாதம் திருமணம் செய்ய உள்ளார். வரும் டிசம்பர் 11ஆம் தேதி கோவாவில் கீர்த்தி சுரேஷ்-க்கும் அவரது நீண்ட நாள் காதலருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் மிக எளிமையாகவும் அதைதொடர்ந்து, பிரமாண்ட வரவேற்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கீர்த்தி ஆண்டனி காதல்
கொச்சியில் பள்ளி பருவத்தில் தன்னுடன் சேர்ந்து பயின்ற ஆண்டனி தட்டில் என்பவரை தான் கீர்த்தி சுரேஷ் காதலித்து வருகிறார். இருவரும் தங்களது பெற்றோர் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள். ஆண்டனி துபாயை மையமாக கொண்ட தற்போது பிஸினஸ் செய்து வருவதாகவும், கொச்சியில் பள்ளி படிப்பின்போது மலந்த காதல் 15 ஆண்டுகளை கடந்து தற்போது திருமணத்தை எட்டியுள்ளதாகவும் தெரிகிறது. இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு கீர்த்தி மற்றும் ஆண்டனி என்று கேப்ஷன் இட்டுள்ளார். தனது திருமணம் குறித்து கீர்த்தி சுரேஷ் மனம் திறப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது.
மதம் மாறுகிறாரா கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி மற்றும் ஆண்டனியின் திருமணம் கோவாவில் கிறித்தவ மதப்படி சர்ச்சில் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் திருமணத்திற்கு முன்பாக கீர்த்தி சுரேஷ் கிறித்தவ மதத்திற்கு மதமாற்ற செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. வெவ்வேறு மதங்களை பின்பற்றும் இரு ஜோடிகளின் திருமணங்கள் பொதுவாக இரு மத வழக்கப்படியும் நடைபெறுவது வழக்கம். என்பதால் கோவாவில் சர்ச் வெட்டிங் தொடர்ந்து இந்து முறைப்படியும் திருமணம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

