மேலும் அறிய
Ajith Kumar: கார் ரேஸ் பயிற்சியில் அஜித்குமார் - வைரல் புகைப்படங்கள்!
Ajith kumar : துபாயில் நடைபெற இருக்கும் 24H ரேஸில் பயன்படுத்த இருக்கும் போர்சி கார்,அவர் பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஜித் குமார்
1/5

நடிகர் அஜித் குமார் மீண்டும் கார் ரேஸிங்கில் களமிறங்க இருக்கிறார். அதன்படி 2025 இல் ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க அஜித் குமார் ரேஸிங் குழு பங்கேற்க இருக்கிறது. இதற்காக இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அணிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதை ஒருங்கிணைப்பதற்கு விளம்பரதாரர்களும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
2/5

அஜித் குமார் ரேஸிங் குழுவில் உரிமையாளர் மற்றும் லீட் ரேஸராக அஜித் இருப்பார். ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் கலந்துகொள்வதற்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற இருக்கும் மிஷலின் 24H ரேஸில் அஜித் தலைமையில் அவரது அணி கலந்துகொள்ள இருக்கிறது.
3/5

ஒரு பக்கம் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் அஜித் இன்னொரு பக்கம் இந்த ரேஸூக்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். பல வருடங்களுக்கு பின் மீண்டும் டிராக்கில் அஜித் களமிறங்க இருப்பது குறித்து அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள் .
4/5

துபாயில் நடைபெற இருக்கும் மிஷலின் 24H பந்தையத்தில் அஜித் குமார் Porsche 992 GT3 Cup காரை பயண்படுத்த இருக்கிறார். Porsche ரேஸிங் சீரிஸின் உயர்ரக கார்களில் ஒன்று இது. அஜித் குமார் என்கிற முத்திரை பெயர் பதிக்கப்பட்டு நெருப்பு போல் பந்தையத்திற்கு தயாராகி இருக்கிறது.
5/5

அஜித் தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று மோட்டார் சைக்கிள்களில் தனது பந்தய வாழ்க்கையை தொடங்கினார். ப்ரோ-கார்ட்ஸில் தீவிர பயிற்சித் திட்டங்களைப் பதிவுசெய்து, அவர் வெற்றிகரமான பங்கேற்பைத் தொடர்ந்துதேசிய பந்தய சாம்பியன்ஷிப், பின்னர் அவர் ஆசிய ஃபார்முலா BMW சாம்பியன்ஷிப் மற்றும் பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றதன் மூலம் சர்வதேச அரங்கிற்கு முன்னேறினார் - டொனிங்டன் பார்க் மற்றும் நாக்ஹில் சர்க்யூட்களில் போடியம் முடித்த பிறகு FIA ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவும் செய்தார்.
Published at : 28 Nov 2024 07:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
கல்வி
க்ரைம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion