Shanam shetty: 10 பேருடன் படுப்பேன்; தம் அடிப்பேன்! என்ன இதெல்லாம்? படுக்கத்தான் கூப்பிடுறாங்க! – கிழித்தெடுத்த பிரபல நடிகை
நடிக்க கூப்பிடுகிறார்கள் என நினைத்தால் படுக்க கூப்பிடுகிறார்கள் என நடிகை சனம் ஷெட்டி சாடியுள்ளார்.

நடிக்க கூப்பிடுகிறார்கள் என நினைத்தால் படுக்க கூப்பிடுகிறார்கள் என நடிகை சனம் ஷெட்டி சாடியுள்ளார்.
வெற்றி மாறனின் உதவி இயக்குநர்களில் ஒருவரான வர்ஷா பரத் என்பவர் பேட் கேர்ள் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அண்மையில் இதுகுறித்த டீசர் வெளியிடப்பட்டு பெரும் சர்ச்சையானது. இப்படத்தை வெற்றிமாறனும் அனுராக் காஷ்யப்பும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசரில் ஒரு பள்ளி பெண் இடம்பெற்றிருப்பார். அதனால்தான் இந்த படத்திற்கு எதிரான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
இதுகுறித்து நடிகை சனம ஷெட்டி பேசுகையில், “சம உரிமை பற்றி படத்தில் பேசுவதாக சொல்கிறார்கள். சம உரிமை என்பது பத்து பேருடன் படுப்பேன். தம் அடிப்பேன் என்பது கிடையாது.
சம உரிமை என்பது வாய்ப்புகளை வழங்குவது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம அளவு வாய்ப்புகளை வழங்குவது. அது கிடைக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை.
கதாநாயகிக்கு கிடைக்கக்கூடிய சம்பளமும் கதாநாயகனுக்கு கொடுக்கக்கூடிய சம்பளமும் ஒன்றாக இருக்கிறதா? கதாநாயகனை தொடர்பு கொள்ளும் விதமும் கதாநாயகியை தொடர்பு கொள்ளும் விதமும் ஒன்றாக இருக்கிறதா? படம் நடிக்க எங்களை கூப்பிடுகிறார்கள் என்று நினைத்தால் இறுதியில் படுக்கத்தான் கூப்பிடுகிறார்கள்.
இதுபோன்ற விஷயங்களில் சம வாய்ப்பு, சம மரியாதை கொடுக்க வேண்டும். பள்ளி குழந்தைகளை கஞ்சா அடி, பத்து பேருடன் படு என்று சொல்வது எப்படி சம உரிமை ஆகும். பேட் கேர்ள் டீசர் எனக்கு தவறாகத்தான் தெரிந்தது.
இந்த படத்தில் ஒரு பள்ளி மாணவி இருக்கிறார். இந்த டீசர் தவறான முன் உதாரணம். பள்ளிக்கல்வியில் பாலியல் கல்வி வரவேண்டும் என சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற டீசர் தவறான முன் உதாரணம்.
இப்படிபட்ட டீசரை பெரிய மனிதர்கள் நியாயப்படுத்துகிறார்கள். அதை பார்க்கும்போதுதான் இன்னும் கொந்தளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

