Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE Updates: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக உருவெடுத்துள்ளது. மழை உள்ளிட்ட வானிலை நிலவரங்களை கீழே உடனுக்குடன் காணலாம்.
LIVE
Background
Fengal Cyclone LIVE Updates:
தென் மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நவம்பர் 30 ஆம் தேதி ( நாளை) மாமல்லபுரம்- காரைக்கால் இடையே நாளை காலை கரையைக் கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
பெரும்பாலான இடங்களில் மழை
இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் 470 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 410 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை:
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு: கனமழை எதிரொலியாக அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் இன்று நடைப்பெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்று தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fengal Cyclone LIVE: தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வராதீர் - புதுச்சேரி அரசு
புயல் கரையை கடப்பதால் இன்றிரவு முதல் நாளை அதிகாலை வரை பொதுமக்கள் அத்தியாவசியத் தேவை இன்றி வெளியே வரவேண்டாம் என்று புதுச்சேரி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது
ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது. அடுத்த 3 மணி நேரத்தில் கரையை கடக்க உள்ளது புயல். இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
10 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் நாளை கரையை கடக்கும் - வெதர்மேன் பிரதீப் ஜான்
ஃபெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கும் என்று கூறப்பட்ட நிலையில், நாளையே கரையை கடக்கும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.