என்றென்றும் புன்னகை சிவகார்த்திகேயன் பண்ண வேண்டியதா...லோக்கல் ஆள் வேண்டாம்னு தூக்கிட்டாங்களா
என்றேன்றும் புன்னகை படத்தில் வினய் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்ததாக நடிகர் ஜீவா தகவல் தெரிவித்துள்ளார்

சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த மாஸ் ஆக்ஷன் த்ரில்லர் படங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் மதராஸி திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இன்னொரு பக்கம் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. காமெடி கதாபாத்திரங்களில் தனது பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது முழுக்க முழ்க்க ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.
என்றென்றும் புன்னகை படத்தில் சிவகார்த்திகேயன்
என்னதான் ஆக்ஷன் ஹீரோ என்றாலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என காமெடி என்று வந்துவிட்டால் தான் கிங் என்று நிரூபித்துவிடுவார் சிவகார்த்திகேயன். நீண்ட இடைவெளிக்குப் பின் காமெடி ஜோனில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் மிகப்பெரிய கமர்சியல் வெற்றிபெற்றது இதனால்தான். அடுத்து எப்போது சீரியஸாக இல்லாமல் காமெடி சப்ஜெட்டில் அவர் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பும் பரவலாக இருந்து வருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் மிஸ் செய்த ஒரு நல்ல நகைச்சுவை படம் பற்றி நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்
ஜீவா தற்போது பா விஜய் இயக்கத்தில் அகத்தியா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷனின் போது தான் நடித்த என்றென்றும் புன்னகை படத்தில் வினய் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்ததாக அவர் கூறியுள்ளார். சந்தானமும் இந்த படத்தில் இருப்பதால் எல்லாரும் விஜய் டிவி குடும்பமாக இருக்கும் என்று வினய் வைத்து பெங்களூரு பையன் மாதிரி நடிக்க வைத்தோம். லோக்கல் ஆட்கள் வேண்டாம் என்று முடிவு பண்ணி பணக்கார பையன்கள் ஆனால் லோக்கலாக இருப்பது மாதிரி பண்ணோம்" என ஜீவா தெரிவித்துள்ள்ளார்
Endrendrum punnagai was supposed to do by #Sivakarthikeyan but santhanam is there so we thought everyone is vijay tv
— VRsamy (@Veerasamy100) February 19, 2025
IYKYK pic.twitter.com/D9kiaj7HqH
காமெடி ரோல் என்றாலே நின்று விளையாடக் கூடியவர் சிவகார்த்திகேயன் . என்றென்றும் புன்னகை படத்தில் அவர் நடித்திருந்தால் நிச்சயமாக இந்த கதாபாத்திரத்தில் தனது ஸ்டைலை கலந்து தனித்துவமானதாக மாற்றியிருப்பார் என எஸ்.கே ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

