தொட்டு நடிக்க தயங்கிய மனோஜ்...பார்த்த உடனே காதலில் விழுந்த மனோஜ் நந்தனா ஜோடி
Manoj Love Story : தனது மனைவி நந்தனாவை பார்த்த நொடியில் அவர் மீது காதல் வயப்பட்டதாக மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா தெரிவித்துள்ளார்

திரையுலகை உலுக்கிய மனோஜின் இறப்பு
இயக்குநர் சிகரம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் உயிரிழந்த நிகழ்வு ஒட்டுமொத்த திரையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தாஜ்மகால் படத்தின் மூலம நடிகராக அறிமுகமான மனோஜூக்கு குறிப்பிட்டு சொல்லும்படி பெரிய வெற்றிப்படங்கள் அமையவில்லை. நடிப்பு , இயக்கம் என சினிமாவில் பல போராட்டங்களுக்கு மத்தியில் தன்னை தக்கவைத்துக் கொண்டு வந்தார் மனோஜ். ஈஸ்வரன் , மாநாடு , கொம்பன் போன்ற படங்களில் இவர் நடித்த கதாபாத்திரங்கள் நல்ல பாராட்டுக்களைப் பெற்று குணச்சித்திர நடிகராக வலம் வரத் தொடங்கினார்.
இப்படியான நிலையில்தான் அவருக்கும் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை நல்லபடியாக முடிந்து மனோஜ் வீடு திரும்பிய நிலையில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயரிரிந்தார்.
மனோஜின் மனைவி நந்தனா
மனோஜின் இறப்பு அவரது குடுமபத்தினருக்கு பெரிய இழப்பை கொடுத்துள்ளது. குறிப்பாக மனோஜின் மனைவி நந்தனாவிற்கு. மனோஜைப் போலவே மலையாள சினிமாவில் நடிகையாக தனது கரியரைத் தொடங்கியவர் நந்தனா. இருவரும் சாதூரியன் படத்தில் இணைந்து நடித்தபோது காதல் ஏற்பட்டது. தனது மனைவியை சந்தித்தது குறித்து பழைய நேர்காணல் ஒன்றில் மனோஜ் தெரிவித்துள்ளார்
"சாதூரியன் படத்தின் முதல் நாள் ஷூட் ஒரு வீட்டில் நடந்தது. படத்தின் ஹீயோயினை இயக்குநர் எனக்கு அறிமுகம் செய்வார் என நான் காத்திருந்தேன் . பின் திரும்பி பார்த்தபோது தான் நந்தனாவை முதல் முறையாக பார்த்தேன். பார்த்த நொடியில் அவர் மேல் காதல் வந்துவிட்டது. நாங்கள் இருவரும் கட்டிலில் அமர்ந்திருக்கும் போது நான் அவர் தோள் மேல் கைபோட வேண்டும். என்னால் அவர்மேல் கை வைக்க முடியவில்லை. 3 முதல் 4 டேக் போய்விட்டது. நந்தனாவுக்கு எதும் புரியவில்லை. பின் தன்னை தொடுவதால் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லி அவரே என் கையை எடுத்து அவர் தோள் மேல் வைத்தார். இறுதிகட்ட படப்பிடிப்பில் அவரும் என்னை காதலிப்பது உறுதியாக தெரிந்துவிட்டது. படப்பிடிப்பு முடிந்து நான் திரும்பி செல்கையில் அவரை விட்டு பிரிவது கடினமாக இருந்தது. மறுபடியும் அவரை எப்போ பார்ப்போம் என ஏங்கினேன். புறப்பட்டு செல்லும்போது நந்தனா என்னை திரும்பி பார்த்தார். அவர் கண்களில் கண்ணீர் தேங்கியிருந்தது. பின் இருவரும் மெசேஜ் செய்துகொண்டு , ஃபோனில் பேசத் தொடங்கினோம்" என தங்கள் காதல் கதையை விவரித்துள்ளார்

