Asal Kolaru: ‛அசலுக்கு வெளியே ஆள் இருக்கு...’ குயின்சி வீடியோ வைரல்!
வெளியில் காதலியை வைத்து கொண்டு பிக் பாஸ் வீட்டிற்குள் காதல் லீலை செய்த அசல் கோலார்... குயின்சி வீடியோ வைரல்.
![Asal Kolaru: ‛அசலுக்கு வெளியே ஆள் இருக்கு...’ குயின்சி வீடியோ வைரல்! Asal Kolaru has a girl friend outside the house queency video goes viral Asal Kolaru: ‛அசலுக்கு வெளியே ஆள் இருக்கு...’ குயின்சி வீடியோ வைரல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/31/035f711a4da2fb5a663ddaa2780772f01667209471467224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிக் பாஸ் சீசன் 6 மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளரான அசல் கோலார் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகியுள்ளார். இவர் வீட்டில் இருந்தபோது பல சண்டை சர்ச்சைகளை ஏற்படுத்தினார். பெண் போட்டியாளர்களை பார்த்து ஜொள்ளு விடுவது, திமிராக பேசுவது என ஒரு டைப்பாக திரிந்து கொண்டு இருந்தார். பிக் பாஸ் வீட்டில் இரண்டாவது நாளே வாடா போடா என பேசி வம்பு இழுக்க தொடங்கினர்.
வைரலாகும் குயின்சி வீடியோ :
போட்டி ஆரம்பமான நாள் முதலே குயின்சியை சைட் அடித்து வந்த அசல் கோலார், அவர் செட்டாகவில்லை என்றவுடன் நிவாவுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார். இது சில சமயங்களில் பார்வையாளர்களின் மத்தியில் எரிச்சலை கிளப்பியது. நெட்டிசன்களும் இவரை தாறுமாறாக கலாய்த்து வந்தார்கள். அந்த வகையில் குயின்சி பேசிய ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அசலுக்கு வெளியில் ஒரு காதலி இருக்கிறாள். நிவா ஒரு ஃப்ரெண்ட் மட்டுமே என கூறுகிறார்.
Asal have girlfriend and Niva is just friend only said by Queency…😅 but.. 🤷🏻♀️🤷🏻♀️
— Bhai (@salyabhai1) October 27, 2022
#BiggBossTamil6 pic.twitter.com/qEQBZLFfRe
பிரபல இசையமைப்பாளர்களுக்கு வரிகளை எழுதிய அசல் :
வசந்தகுமார் என்பது தான் அசல் கோலாரின் உண்மையான பெயர். இவர் 'ஜோர்த்தாலே' என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர். யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோரின் இசையில் உருவான காஃபி வித் காதல், குலு குலு, மகான் பாடல்களுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஜிவி பிரகாஷ் நடித்த 'பேச்சுலர்' பட பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார் அசல் என்பது குறிப்பிடத்தக்கது.
Asal's final words hits differently knowing all the backstories 😁#BiggBossTamil6 pic.twitter.com/sICOcH1JU8
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) October 30, 2022
முடிவுக்கு வந்த அசல் - நிவா காதல் ஜோடி :
பிக் பாஸ் வீட்டுக்குள் பெண்களிடம் கடலை போடுவதையே முழு நேர வேலையாக வைத்திருந்த அசல், மைனா நந்தினி, மகேஸ்வரியையும் கூட விடவில்லை. கையை தடவுவது, காலை தடவுவது என லீலைகளை தொடர்ந்து கொண்டே இருந்தார். ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் வீட்டிற்குள் காதல் மலர்வது ஒன்றும் புதிதல்ல அந்த வகையில் இந்த சீசன் காதல் ஜோடிகளாக இருந்த அசல் - நிவா காதல் கதை அசலில் எலிமினேஷனால் முடிவுக்கு வந்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)