மேலும் அறிய

போதை பொருளுக்கு பதிலாக அஜினமோட்டோ.. கொலையில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் , மெத்தபெட்டமைனுக்கு பதிலாக அஜினோ மோட்டோ கொடுத்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் கொலை நடந்தது.

படிப்பு பாதியில் நிறுத்தம்

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகர் புது நகர் ஏழாவது தெருவை சேர்ந்தவர் குமார் சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு சங்கர் ( வயது 19 ) வனிதா ( வயது 17 ) என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். குமார் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். சங்கர் அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வந்துள்ளார். படிப்பு சரியாக வரவில்லை எனக் கூறி பாதியிலேயே நின்று விட்டார்.

விளையாடும் போது கைகலப்பு

நேற்று முன்தினம் , சங்கருக்கு பிறந்தநாள் என்பதால் அவருடன் படித்த மாணவர்கள் சங்கருக்கு கேக் வெட்ட வேண்டும் என நேற்று முன்தினம் மாலை அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு அனைவரும் எருக்கஞ்சேரி பகுதியில் ஒன்றாக கால்பந்தாட்டம் விளையாடி உள்ளனர். அப்போது சங்கருக்கும் அவரது நண்பரான ஸ்டீபன் ராஜ் என்பவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது சங்கர் ஸ்டீபன் ராஜை அடித்ததாக கூறப்படுகிறது.

சாலையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

அதன் பிறகு நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சமாதானமாகி சென்று விட்டனர். அதன் பிறகு கருணாநிதி சாலையில் சங்கரின் பிறந்தநாளை கேக் வெட்டி நண்பர்கள் அனைவரும் கொண்டாடியுள்ளனர். அப்போது அங்கு வந்த நித்தின், லிங்கேஷ் ஆகியோர் சங்கரிடம் பிறந்தநாளுக்கு பார்ட்டி கேட்டு மது வாங்கித் தரும் படி கேட்டுள்ளனர். அதன் பிறகு அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது இறந்து போன சங்கரிடம் ஏன் ஸ்டீபன் ராஜை அடித்தாய் என கேட்டு லிங்கேஷ் , நித்தின் மற்றும் அவரது நண்பர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். திடீரென சங்கரை அடித்து துரத்திக் கொண்டு எருக்கஞ்சேரி கைலாசம் தெரு பகுதியில் உள்ள முட்புதரின் வைத்து சங்கரை வெட்டி  உள்ளனர். இதில் தலை மற்றும் முகம் ஆகிய இடங்களில் பலத்த வெட்டு காயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து போலீசார்  விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமரா மற்றும் உயிரிழந்த சங்கரின் நண்பர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் கொடுங்கையூர் போலீசார் ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் ( வயது 21 ) , கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ( வயது19 ) எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த நித்தின் குமார் ( வயது 20 ) வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ஜாபர் அகமது ( வயது 27 ) எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த நவீன் என்கின்ற பாலா ( வயது 20 ) , வியாசர்பாடி பி.வி காலனி பகுதியைச் சேர்ந்த பாலாஜி ( வயது 19 ) மற்றும் கொடுங்கையூர் சின்னாண்டி மடம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என ஏழு பேரை கைது செய்தனர்.

மெத்தபெட்டமனுக்கு பதில் அஜினமோட்டோ

இவர்களிடம் நடத்திய விசாரணையில் உயிரிழந்த சங்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பார்ட்டி கொண்டாடுவதற்காக சங்கர் மற்றும் அவரது நண்பர் தீபக் ஆகிய இருவரும் சேர்ந்து கைது செய்யப்பட்ட நித்தின் குமார் என்பவரின் நண்பர் கந்தா என்பவரிடம் இரு தினங்களுக்கு முன்பு மெத்தபெட்டமைன் என்னும் போதை பொருள் வாங்குவதற்காக 2500 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளனர். கந்தா பணத்தை வாங்கிக் கொண்டு மெத்தபெட்டமைன் போதைப் பொருள் தருவதாக கூறி அஜினோமோட்டோ என்னும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருளை கொடுத்துள்ளார்.

அதனை வாங்கி பயன்படுத்திய போது அது போலி என்பதை தீபக் மற்றும் சங்கர் ஆகியோர் கண்டு பிடித்து விட்டனர். அதன் பிறகு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது சங்கர் மற்றும் அவரது நண்பர் தீபக் ஆகியோர் இது குறித்து நித்தின் குமார் மற்றும் அவரது நண்பர் ஸ்டீபன் ஆகிய இருவரிடமும் கேட்டுள்ளனர். அப்போது பிரச்சினை ஏற்பட்டு கோபமடைந்த சங்கர் கத்தியால் ஸ்டீபன் மற்றும் நித்தின் குமாரை தாக்கி அடித்துள்ளனர்.

அதன் பிறகு நித்தின் குமார் லிங்கேஸ்வரனை வரவழைத்துள்ளார் லிங்கேஸ்வரனையும் சங்கர் கத்தியால் அடித்துள்ளார். காயம் பட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து  நடந்த விஷயங்களை தனது நண்பர்களிடம் கூறி கைது செய்யப்பட்ட  அனைவரும் ஒன்று சேர்ந்து சங்கரை வெட்டியது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ஏழு பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இந்த வழக்கில் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வானூர் அருகே காதலை கைவிட மறுத்த 14 வயது மகள் - கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை!
வானூர் அருகே காதலை கைவிட மறுத்த 14 வயது மகள் - கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை!
"திருமணமாகாமல் கர்ப்பம் - பீங்கானில் அமுக்கி கொன்றேன் " மருத்துவமனை கழிவறையில் கொடூரம்
“பெண்கள் விஷயத்தில் பொய்யான புகார் கொடுப்போம்” உ.பி., வியாபாரியை மிரட்டிய வணிகர்கள்.. உயிர் தப்பிய தொழிலாளர்கள் - நடந்தது என்ன?
“பெண்கள் விஷயத்தில் பொய்யான புகார் கொடுப்போம்” உ.பி., வியாபாரியை மிரட்டிய வணிகர்கள்.. உயிர் தப்பிய தொழிலாளர்கள் - நடந்தது என்ன?
சண்டை போட்ட கள்ளக்காதலி.. தட்டிக்கேட்ட மாமனார் கொடூர கொலை.. சிரித்துக்கொண்டே வந்த கள்ளக்காதலன்
சண்டை போட்ட கள்ளக்காதலி.. தட்டிக்கேட்ட மாமனார் கொடூர கொலை.. சிரித்துக்கொண்டே வந்த கள்ளக்காதலன்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK On Stalin:: ”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
Congress Rally: ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
இன்று விண்ணில் பாய்கிறது GSLV - F18 : இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் NVS-03 செயற்கைக்கோள் பற்றி தெரியுமா?
இன்று விண்ணில் பாய்கிறது GSLV - F18 : இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் NVS-03 செயற்கைக்கோள் பற்றி தெரியுமா?
உலகையே உற்றுநோக்க வைக்கும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்! - மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு?
உலகையே உற்றுநோக்க வைக்கும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்! - மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு?
Tasmac: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
வானூர் அருகே காதலை கைவிட மறுத்த 14 வயது மகள் - கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை!
வானூர் அருகே காதலை கைவிட மறுத்த 14 வயது மகள் - கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை!
Embed widget