இந்தியாவில் எதிர்வரும் தேர்தல்
இந்தாண்டு இரண்டு மாநிலங்களுக்கு மட்டுமே சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. முதலில், பிப்ரவரி மாதம், டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு, தற்போது ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அடுத்ததாக, அக்டோபர் - நவம்பர் மாதங்களில் பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இங்கு, தற்போது பாஜகவின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் உள்ளார். இந்த இரண்டு தேர்தல்களை தவிர, பல்வேறு மாநிலங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது.
# | State | Current Term | Year | Total LA Seats | Lok Sabha | Rajya Sabha |
---|---|---|---|---|---|---|
1 | டெல்லி | 2020-02-24 - 2025-02-23 | 2025 | 70 | 7 | 3 |
2 | பீகார் | 2020-11-23 - 2025-11-22 | 2025 | 2430 | 40 | 16 |




