Delhi Election Results 2025: ஈகோவால் பறிபோன தலைநகரம்.. குத்திக்காட்டிய கூட்டணி கட்சிகள்.. குதூகலத்தில் பாஜக!
Delhi Assembly Election Results : டெல்லி சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிட்டதால் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டது.

காங்கிரஸ் மட்டும் ஆம் ஆத்மி கட்சியின் ஈகோவால் டெல்லி தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக சென்றதாக இந்தியா கூட்டணி கட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.
டெல்லி தேர்தல் முடிவுகள்:
டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றனர். அங்கு ஆட்சி அமைக்க 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியுள்ளது. தற்போதைய சூழலில் பெரும்பான்மைக்கு தேவையானதை காட்டிலும், கூடுதல் தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதனால், இரண்டாவது முறையாக தலைநகரில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் சூழல் நிலவுகிறது.
இதையும் படிங்க: Delhi CM Face: தலைநகரை கைப்பற்றிய பாஜக - டெல்லி முதலமைச்சர் ரேஸில் முந்துவது யார்? வேலையை தொடங்கிய மோடி - ஷா கூட்டணி
தனித்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி:
டெல்லி சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிட்டன, இரு கட்சியின் தலைவர்களும் மாறி மாறி தேர்தல் பிரச்சாரத்தின் போது விமர்சனங்களை எடுத்து வைத்தனர்.இதனால் பாஜகவுக்கு இது சாதகமாக மாறியது, இதனால் இந்த தேர்தலில் பாஜக வெற்றிப்பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பாஜக ஆட்சி அமைக்கும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சிகள் ஆம் ஆத்மி தோல்வி குறித்து விமர்சனம் செய்தன
உத்தவ் தாக்கரே:
தேர்தல் முடிவுகள் கருத்து தெரிவித்த சிவசேனா (யுபிடி) கட்சியை சேர்ந்த உத்தவ் தாக்கரே தேர்தல் முடிவின் ஆரம்பகால போக்குகளை பார்க்கும் போது நெருக்கமான போட்டியைக் காட்டுகின்றன. காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் ஒன்றாக இருந்திருந்தால், முடிவுகள் வேறு விதமாக இருந்திருக்கலாம்.
ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸின் அரசியல் எதிரி பாஜக, பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க அவர்கள் இருவரும் போராடினர், ஆனால் அவர்கள் தனித்தனியாகப் போராடினர். அவர்கள் ஒன்றாக இருந்திருந்தால் (எண்ணிக்கை எண்ணும் முதல் மணி ஒரு நேரத்திலே) பாஜகவின் தோல்வி உறுதி செய்யப்பட்டிருக்கும்," என்று சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.
சிவசேனா (யுபிடி) நடுநிலை வகிக்க முடிவு செய்த பிறகு, டெல்லி தேர்தலில் உத்தவ் தாக்கரே பிரச்சாரம் செய்யவில்லை. மகாராஷ்டிரா வாக்காளர் கையாளுதல் முறை டெல்லியில் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டதாகவும், தேர்தல் ஆணையம் கண்களை மூடிக்கொண்டிருப்பதாகவும் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டினார்.
திருமாவளவன்:
இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவனும் இந்த தேர்தல் தோல்வி குறித்து தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ,” டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. ஆம் ஆத்மி இந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை, டெல்லியில் பாஜக ஆட்சி அமையும் ஆனால் அது தேசத்திற்கான பின்னடைவு என கருத வேண்டி இருக்கிறது. டெல்லியில் நடைபெற்ற தேர்தல் நியாயமாக முறையில் நடைபெற்றதா என்ற ஐய்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. காங்கிரஸ் ஆம் ஆத்மி ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கவில்லை இந்தியா கூட்டணி தலைவர்கள் இதுகுறித்து தீவிரமாக கலந்தாய்வு செய்ய வேண்டும். இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஈகோ பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளி விட்டு நாட்டையும் மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல சட்டசபை தேர்தலிலும் இந்தியா கூட்டணி ஒருங்கிணைத்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. டெல்லி தேர்தல் அடிப்படையாகக் கொண்டு கூட்டணியில் உள்ள கட்சிகள் சந்திக்க வேண்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுகிறது ஈரோடு எதிர்பார்த்த வெற்றியை திமுக பெரும் என்று நம்புகிறேன். என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

