Rahul Gandhi:டெல்லி தேர்தலில் ஒரு தொகுதிகூட வெற்றியில்லை: ராகுல் காந்தி சொன்னது என்ன?
Delhi Election Result 2025: டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தலில் படுதோல்வியை காங்கிரஸ் சந்தித்த நிலையில், மக்கள் முடிவை பணிவுடன் ஏற்றுக் கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், மக்கள் வழங்கிய தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம் என்றும் ஊழலுக்கு எதிராக, எங்களின் போராட்டம் தொடரும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி தேர்தல்:
டெல்லி சட்டப்பேரவையில் உள்ள 70 தொகுதிகளுக்கான தேர்தல், கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்றது. இங்கு 66.25 சதவிகித வாக்குகள் பதிவாகியதாக, இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையானது, காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு, 36 தொகுதிகளில் வெற்றி தேவை.
டெல்லி ஒன்றிய பிரதேசமாக இருந்தாலும், சட்டப்பேரவையை கொண்டுள்ள சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளது. சட்டப்பேரவையில் 70 தொகுதிகள், மக்களவையில் 7 தொகுதிகள் என குறைந்த அளவில் இருந்தாலும், இந்திய நாட்டின் தலைநகரமாகவும் இருப்பதால், மிகுந்த அதிகாரம் உள்ள இடமாக, டெல்லி திகழ்கிறது என்றே சொல்லலாம்.
Also Read: ”இந்த ஜென்மத்தில் எங்களை தோற்கடிக்க முடியாது மோடி”: வைரலாகும் கெஜ்ரிவால் பழைய வீடியோ!
மீண்டும் அரியணையில் ஏறும் பாஜக:
இத்தேர்தலில் ஆட்சியில் இருக்கும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையேயான மும்முனை போட்டி இருந்தது.
இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், ஆரம்பம் முதலே, பாஜக முன்னிலை வகித்து வந்தது.
டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. இதனால், பாஜக ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது. இதில் ஒரு தொகிதிகளில்கூட காங்கிரஸ் வெற்றி பெறாத்து கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகிய மூத்த தலைவர்களின் தோல்வியானது, ஆம் ஆத்மிக்கு பலத்த அடியை கொடுத்துள்ளது. கெஜ்ரிவால் பாஜகவின் பர்வேஷ் வர்மாவிடம் தோல்வியடைந்தார், சிசோடியா தர்விந்தர் சிங் மர்வாவிடம் தோல்வியடைந்தார்.
இந்த தருணத்தில், 1993- 1998 ஆகிய ஆண்டுகளில் பாஜக ஆட்சி அமைத்திருந்த நிலையில், தற்போது, மீண்டும் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க உள்ளது.
Also Read: NTK Lose Deposit: ஈரோடு தேர்தலில் டெபாசிட்டை இழந்த நாம் தமிழர்: டெபாசிட் என்றால் என்ன?
ராகுல் காந்தி பேச்சு:
டெல்லியில் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களின் அர்ப்பணிப்பிற்காகவும், ஆதரவளித்த அனைத்து வாக்காளர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
டெல்லியின் முன்னேற்றத்திற்காகவும், டெல்லிவாசிகளின் உரிமைகளுக்காகவும், காற்று மாசுபாடு, பணவீக்கம் மற்றும் ஊழலுக்கு எதிராக, எங்களின் போராட்டம் தொடரும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
दिल्ली का जनादेश हम विनम्रता से स्वीकार करते हैं।
— Rahul Gandhi (@RahulGandhi) February 8, 2025
प्रदेश के सभी कांग्रेस कार्यकर्ताओं को उनके समर्पण और सभी मतदाताओं को उनके समर्थन के लिए दिल से धन्यवाद।
प्रदूषण, महंगाई और भ्रष्टाचार के विरुद्ध - दिल्ली की प्रगति और दिल्लीवासियों के अधिकारों की यह लड़ाई जारी रहेगी।
இந்நிலையில், பெரும்பான்மைக்கு தேவையானதைவிட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக , சில நாட்களில் ஆட்சி பொறுப்பை ஏற்கவுள்ளது, பாஜகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

