மேலும் அறிய

TN Weather Rain: வெயில் பொளக்குதேன்னு பயப்படாதீங்க.? இதோ மழை வந்துட்டே இருக்கு; வானிலை மையம் குட் நியூஸ்.!

தமிழ்நாட்டில் வெயில் சுட ஆரம்பித்துவிட்ட நிலையில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எப்போது எங்கு மழை பெய்யும்.? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்ட நிலையில், வரும் மார்ச் 4-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எங்கெங்கு எப்போது மழை பெய்யும் என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

மார்ச் 4-ம் தேதி வரை மிதமான மழை - வானிலை மையம் அறிக்கை

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவித்துள்ளது. இதனால், தென் தமிழகம், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நாளை(27.02.2026) தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள்(28.02.2026) முதல் 1-ம் தேதி வரை, மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

வரும் மார்ச் 2-ம் தேதி, தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மார்ச் 3-ம் தேதி, தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகள்) ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மார்ச் 4-ம் தேதி, தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று முதல் மார்ச் 2-ம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னையில் வானிலை எப்படி இருக்கும்.?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நாளை(27.02.2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK alliance seat allocation : எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
‘வாயில் நுழையாத வட மொழி பெயர் ; வக்காலத்து வாங்கும் EPS’ கோபமான அமைச்சர் ஐ.பி..!
‘வாயில் நுழையாத வட மொழி பெயர்’ ஆவேசமான அமைச்சர் ஐ.பி..!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
குண்டுவீச்சு: கூட்டணி தலைவர் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தை பாதுகாக்கக் கூட துப்பில்லையா? அன்புமணி கேள்வி
குண்டுவீச்சு: கூட்டணி தலைவர் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தை பாதுகாக்கக் கூட துப்பில்லையா? அன்புமணி கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
iPhone 16 Huge Discount: ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Embed widget