Delhi Election 2025: நாங்க ஜீரோதான், ஆனாலும் பாஜகவிற்கு ஹீரோ - ஆம் ஆத்மியை காங்கிரஸ் பார்சல் கட்டியது எப்படி?
Delhi Election 2025 Congress: டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் அபார வெற்றிக்கு, காங்கிரஸ் கட்சி உதவியது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Delhi Election 2025 Congress: டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி 12 இடங்களில் தோல்வியை சந்திக்க, காங்கிரஸ் கட்சி முக்கிய காரணியாக இருந்துள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தல்:
டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பரபரப்பிற்கு சற்றும் பஞ்சமில்லாமல் வெளியாகின. அதன் முடிவில் பாஜக 48 இடங்களை வென்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகரில் ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி, வெறும் 22 இடங்களில் மட்டுமே வென்றது. குறிப்பாக அக்கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் வீழ்த்தப்பட்டது பேரதிர்ச்சி அளிக்கிறது. இதனிடையே, தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதேநேரம், டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக அருதி பெரும்பான்மை பெற, காங்கிரஸ் மிக முக்கிய பங்காற்றியுள்ளது.
பாஜகவிற்கு உதவிய காங்கிரஸ்
புது டெல்லி தொகுதியில் பாஜகவின் பர்வேஷ் வர்மாவை விட 4,089 வாக்குகள் வித்தியாசத்தில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியை தழுவினார். அதே இடத்தில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சந்தீப் தீட்சித் 4,568 வாக்குகள் பெற்றார். இது பாஜக கட்சி பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிகம். ஜங்புரா, கிரேட்டர் கைலாஷ் மற்றும் சத்தர்பூர் சட்டமன்றத் தொகுதிகளிலும் இதே சூழலே நிலவுகிறது. அங்கு ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையிலான வித்தியாசம் காங்கிரஸ் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை விடக் குறைவு. ஜங்புராவில், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பாஜகவின் தர்விந்தர் மர்வாவிடம் தோல்வியடைந்தார். அதிக செல்வாக்கு மிக்க கிரேட்டர் கைலாஷ் தொகுதியில், சவுரப் பரத்வாஜும் அதே கதியை சந்தித்தார். அதற்கும் காங்கிரஸ் பிரித்த வாக்குகளே காரணம்.
12 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம்
புது டெல்லி: பாஜக வெற்றி, 4,089 வாக்குகள் வித்தியாசம்; காங்கிரஸ் வாக்குகள் 4,568.
சத்தர்பூர்: பாஜக வெற்றி, 6,239 வாக்குகள் வித்தியாசம்; காங்கிரஸ் வாக்குகள் 6,601.
ஜங்புரா: பாஜக வெற்றி, 675 வாக்குகள் வித்தியாசம்; காங்கிரஸ் வாக்குகள் 7,350.
பத்லி: பாஜக வெற்றி, 10,661 வாக்குகள் வித்தியாசம்; காங்கிரஸ் வாக்குகள் 31,130.
சங்கம் விஹார்: பாஜக வெற்றி, 344 வாக்குகள் வித்தியாசம்; காங்கிரஸ் வாக்குகள் 15,863.
மாளவியா நகர்: பாஜக வெற்றி, 2,131 வாக்குகள் வித்தியாசம் , காங்கிரஸ் வாக்குகள் 6,770.
ராஜீந்தர் நகர்: பாஜக வெற்றி, 1,231 வாக்குகள் வித்தியாசம்; காங்கிரஸ் வாக்குகள் 4,015
திரிலோக்புரி: பாஜக வெற்றி, 392 வாக்குகள் வித்தியாசம், காங்கிரஸ் வாக்குகள் 6,147
மால்வியா நகர்: பாஜக வெற்றி, 2,031 வாக்குகள் வித்தியாசம், காங்கிரஸ் வாக்குகள் 6,770
உக்: பாஜக வெற்றி, 3039 வாக்குகள் வித்தியாசம், காங்கிரஸ் வாக்குகள் 6,677
திமார்பூர்: பாஜக வெற்றி, 316 வாக்குகள் வித்தியாசம், காங்கிரஸ் வாக்குகள் 5,754
நங்லோய்: பாஜக வெற்றி, 26,251 வாக்குகள் வித்தியாசம், காங்கிரஸ் வாக்குகள் 32,028
கூடி வாழாவிட்டால் மோடிக்கே நன்மை:
ஒருவேளை காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைத்து போட்டி போட்டு இருந்தால், இந்த தேர்தலில் கூடுதல் இடங்களில் அவர்கள் வெற்றி பெற்று இருக்க முடியும் என்பதையே இந்த விவரங்கள் காட்டுகின்றன. ஆனால், இரு கட்சி தலைவர்கள் இடையே இல்லாத விடுக் கொடுக்கும் தன்மையால், வாக்குகள் பிரிந்து 27 ஆண்டுகள் கழித்து டெல்லி பாஜக வசம் சென்றடைந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

