Delhi Election: கெஜ்ரிவாலுக்கு முன்பே ஜெயலலிதா - தேர்தல் தோல்வி, இது தெரியாமா போச்சே, நீளும் CM லிஸ்ட்
Delhi Election: இந்திய தேர்தல் வரலாற்றில் தோல்வி கண்ட முதலமைச்சர்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Delhi Election: இந்திய தேர்தல் வரலாற்றில் தோல்வி கண்ட முதலமைச்சர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆட்சியை இழந்த ஆம் ஆத்மி
டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில், கடந்த 5ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் வெளியாகின. அதில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக தலைநகரில் ஆட்சியைக் கைப்பற்றியது. அதேநேரம், பெரும்பாலான தேர்தல் கருத்து கணிப்புகள் சொன்னபடியே, 10 ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி ஆட்சியை இழந்தது. அதற்கு மதுபானக் கொள்கை ஊழல், இந்தியா கூட்டணியில் இரட்டை நிலைப்பாடு, வளர்ச்சித் திட்டங்களை கைவிடுத்து, இலவசங்களுக்கு முன்னுரிமை அளித்தது என பல காரணங்கள் கூறப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியை இழக்கும் என பலரும் எதிர்பார்த்தாலும், முதலமைச்சர் வேட்பாளரான கெஜ்ரிவால் தோற்பார் என எதிர்பார்க்கவில்லை.
கெஜ்ரிவால் தோல்வி:
கடந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களிலும், புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட கெஜ்ரிவால் தொடர்ந்து வெற்றி பெற்றார். நான்காவது முறையாகவும் அவர் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக தனது சொந்த சட்டமன்ற தொகுதியிலேயே கெஜ்ரிவால் தோல்வியை சந்தித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர், பர்வேஷ் வர்மா சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. ஆனால், முதலமைச்சராக இருந்து, மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கிய ஒருவர் தேர்தலில் தோல்வி காண்பது என்பது இந்திய தேர்தல் வரலாற்றில் இது முதல்முறை அல்ல. அந்த வகையில் தேர்தலில் தோல்வியுற்ற முதலமைச்சர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
தேர்தலில் தோல்வியுற்ற முதலமைச்சர்கள்:
- 2013 டெல்லி சட்டமன்ற தேர்தலில் அப்போதைய முதலமைச்சர் ஷீலா தீட்ஷித், கெஜ்ரிவாலால் புது டெல்லி தொகுதியில் வீழ்த்தப்பட்டார்
-
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 2021 சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்தார்.
-
ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே 2008 சட்டமன்றத் தேர்தலில் ஜலவர்பதன் தொகுதியில் போட்டியிட்டு தேர்தலில் தோல்வியடைந்தார்.
-
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா, 1989 சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
-
2007 உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மாயாவதி அக்பர்பூர் தொகுதியில் போட்டியிட்டு தேர்தலில் தோல்வியடைந்தார்.
-
2005 சட்டமன்றத் தேர்தலில், பீகாரின் முன்னாள் முதலமைச்சர் ரப்ரி தேவி ரகோபூரில் தொகுதியில் போடியிட்டு தோல்வியடைந்தார்.
-
2005 ஆம் ஆண்டு ஹரியானா தேர்தலில், முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா நர்வானா தொகுதியில் போட்டியிட்டு தேர்தலில் தோல்வியடைந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

