T20 WC IND Vs ZIM: டி20 உலகக் கோப்பை; அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா இந்தியா.? ஜிம்பாப்வேயுடன் இந்தியா முதலில் பேட்டிங்
டி20 உலகக்உகோப்பை போட்டியில் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறுமா என்று ரசிர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், இன்று ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில், இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது. சூப்பர் 8 சுற்றில் தனது முதல் போட்டியில் இந்திய அணி தோற்றதால், அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு மங்கலானது. இந்நிலையில், இன்று ஜிம்பாப்வே அணியுடன் நடைபெறும் போட்டியில், ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்கிறது.
இந்திய அணியின் இன்றைய Playing 11
ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியதால், இந்திய அணி, ஜிம்பாப்வே உடனான இன்றைய போட்டி மற்றும் அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில், இன்றைய போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்திய அணியில் இன்று, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (wk), இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (c), சிவம் துபே, ஹார்டிக் பாண்ட்யா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் CV, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் களமிறங்குகின்றனர்.
உலகக் கோப்பையில், ஜிம்பாப்வே அணியுடன் இந்திய அணி இதுவரை 12 போட்டிகளில் மோதியுள்ளது. அதில் 11 முறை இந்திய அணியும், ஒரே ஒரு முறை ஜிம்பாப்வே அணியும் வெற்றி பெற்றுள்ளன.
இந்தியாவிற்கு அதிக வாய்ப்பு
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு இடையேயான இன்றைய போட்டியில், தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதனால், இந்தியாவிற்கான அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, தொடக்கத்தில் மிகவும் தடுமாறியது. எனினும் பின்னர் சுதாரித்து, ஹோல்டர் மற்றும் ஷெப்பர்ட்டின் சிறப்பான ஆட்டத்தால், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி வீரர்கள், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். முதல் விக்கெட்டிற்கு 95 ரன்கள் பாட்னர்ஷிப்புடன் அபார ரன் சேஸில் ஈடுபட்டனர். டி காக் மட்டும் அதிரடியாக 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த நிலையில், மார்க்ரம் மற்றும் ரிக்கல்டனின் அபார ஆட்டங்களால், 16.1 ஓவர்களிலேயே தென்னாப்பிரிக்க அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. மார்க்கரம் 82 ரன்களுடனும், ரிக்கல்டன் 45 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தோற்றதையடுத்து, அடுத்த 2 போட்டிகளில் பெற்றிபெறும் பட்சத்தில், இந்தியாவிற்கான அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அடுத்த இரண்டு போட்டிகளிலுமே இந்தியா வெற்றிபெற்றாலே, ரன் ரேட் பிரச்னை இல்லாமல், இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்துவிடும். இதனால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளது.




















