”இந்த ஜென்மத்தில் எங்களை தோற்கடிக்க முடியாது மோடி”: வைரலாகும் கெஜ்ரிவால் பழைய வீடியோ!
Delhi Election Result 2025: இந்த ஜென்மத்தில், எங்களைத் தோற்கடிக்க முடியாது மோடி, எங்களைத் தோற்கடிக்க, நீங்கள் இன்னொரு பிறவி எடுக்கணும் என கெஜ்ரிவால் பேசிய பழைய வீடீயோவை பாஜகவினர் பகிர்ந்து வருகின்றனர்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், நியூ டெல்லி தொகுதியில் தொடர்ந்து நான்காவது முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவித் கெஜ்ரிவால், பாஜக தலைவர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மாவிடம் தோல்வியடைந்தார். இந்த தருணத்தில், கெஜ்ரிவால், மோடியிடம் சவால் விட்ட , பழைய வீடீயோவை பாஜகவினர் பகிர்ந்து வருகின்றனர்.
அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு:
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், புதுதில்லி தொகுதியில் தோல்வி அடைந்த பிறகு, இந்த "வாழ்நாளில்" ஆம் ஆத்மி கட்சியை பாஜகவால் தோற்கடிக்க முடியாது என்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.
அந்த வீடியோவில் கெஜ்ரிவால் பேசியிருந்ததாவது”
கடந்த 2023 இல் பொதுக் கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியிருந்தார்.அதில் அவர் பேசியிருந்ததாவது “ஆம் ஆத்மி அரசாங்கத்தை கவிழ்ப்பதே பாஜகவின் நோக்கம், நரேந்திர மோடி ஜி டெல்லியில் இந்த வழியில் ஆட்சி அமைக்க விரும்புகிறார்; தேர்தல் மூலம் எங்களை தோற்கடிக்க முடியாது என்பது அவர்களுக்கு தெரியும்.
இந்த ஜென்மத்தில், எங்களைத் தோற்கடிக்க முடியாது என்றும், டெல்லியில் எங்களைத் தோற்கடிக்க, நீங்கள் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும் என்றும் நரேந்திர மோடியிடம், நான் சொல்ல விரும்புகிறேன், ”என்று 2023 இல் பொதுக் கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியிருக்கிறார்.
வைரலாகும் பழைய வீடியோ:
Modi ji: Haan to kya bola tha.. 😂 pic.twitter.com/82oRBWeXxX
— maithun (@Being_Humor) February 8, 2025
தோல்வியை தழுவிய கெஜ்ரிவால்:
தற்போதைய நிலவரப்படி, தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ள முடிவுகளில் டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. இதனால், பாஜக ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது
மேலும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகிய மூத்த தலைவர்களின் தோல்வியானது, ஆம் ஆத்மிக்கு பலத்த அடியை கொடுத்துள்ளது. கெஜ்ரிவால் பாஜகவின் பர்வேஷ் வர்மாவிடம் தோல்வியடைந்தார், சிசோடியா தர்விந்தர் சிங் மர்வாவிடம் தோல்வியடைந்தார்.
இந்த தருணத்தில், 1993- 1998 ஆகிய ஆண்டுகளில் பாஜக ஆட்சி அமைத்திருந்த நிலையில், தற்போது, மீண்டும் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க உள்ளது.
இந்த தருணத்தில், இந்த ஜென்மத்தில் ஆட்சியமைக்க முடியாது என கெஜ்ரிவால் பேசியிருந்த நிலையில், தற்போது மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், இந்த வீடியோவை பாஜகவினர் பகிர்ந்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

