Election: காதலர் தின வாரத்தில் சிவப்பிற்கு பதிலாக காவியாக மாறிய டெல்லி! உற்சாகத்தில் பாஜகவினர்!
Delhi Election Result 2025: காதலர் தின வாரத்தை சுட்டிகாட்டி, டெல்லி சட்டப்பேர்வைத் தேர்தல் வெற்றியை , பாஜகவினர் காதல் வெற்றி போல கொண்டாடி வருகின்றனர்.

இந்த காதலர் வாரத்தில் சிவப்பு நிறம் ஒளி வீசும் நிலையில், டெல்லி வாக்காளர்களுக்கு, டெல்லியில் காவி நிறம் ஒளிவீசி வருகிறது.
டெல்லி மக்களின் இதயத்தில் பாஜக:
டெல்லி தேர்தலின் இன்றைய தேர்வு முடிவுகளின் மூலம், டெல்லி மக்களின் இதயத்தில் பாஜக இடம் பிடித்துவிட்டதே என்றே சொல்லலாம்.இதனால், காவி நிறமாக மாறியது டெல்லி ஒன்றிய பிரதேசம்.
காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும். இந்நிலையில், தற்போது காதலர் வாரமும் கொண்டாடப்படும் வழக்கமும் ஏற்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில், காதலர் தின வாரத்தின் 2வது நாளான இன்று, ப்ரோபோசல் டே கொண்டாடப்படுகிறது.
அதாவது, இன்று தங்களது மனதிற்கு பிடித்தவர்களிடம் தங்களது காதலை-அன்பை வெளிப்படுத்தும் நாளாக பார்க்கப்படுகிறது.
இந்த நாளில், டெல்லி மக்களின் அன்பு எங்களுக்கு கிடைத்திருக்கிறது என பாஜகவினர் தெரிவித்து வருவதை, சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.
Also Read: NTK Lose Deposit: ஈரோடு தேர்தலில் டெபாசிட்டை இழந்த நாம் தமிழர்: டெபாசிட் என்றால் என்ன?
காவி நிறமாக டெல்லி:
காதலர் தினம் என்றாலே சிவப்பு வண்ணம்தான் ஞாபகத்திற்கு வரும். காதலர்கள் , சிவப்பு வண்ணம் கொண்ட ரோஜாவை பரிமாறிக் கொள்வர். அதுபோல், டெல்லி மக்களின் அன்பால், எங்கும் காவி நிறம் பரவி கிடக்கிறது என்றும் பாஜகவினர், தெரிவித்து வருகின்றனர்.
துரதிர்ஷ்டவசமாக, ஆம் ஆத்மி கட்சியால் டெல்லியின் பொதுமக்களை அன்பை, அவர்களால் ஈர்க்க முடியவில்லை மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் வெறுக்கப்பட்டுள்ளார் என்றும் பாஜகவினர் கவிதை மழை போல காதலையும் டெல்லி தேர்தலையும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நாளை பிப்ரவரி 9, 'சாக்லேட் தினம்' என்றும், இதனால் பாஜகவிற்கு, வாக்கின் வழியாக அன்பை கொடுத்த டெல்லி மக்களுக்கு, நாளை இனிப்பை வழங்குவோம் எனவும் சிலர் தெரிவித்துள்ளனர்.
Also Read: ”இந்த ஜென்மத்தில் எங்களை தோற்கடிக்க முடியாது மோடி”: வைரலாகும் கெஜ்ரிவால் பழைய வீடியோ!
தேர்தல் வெற்றி:
டெல்லி சட்டப்பேரவையில் உள்ள 70 தொகுதிகளுக்கான தேர்தல், கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்றது. இங்கு 66.25 சதவிகித வாக்குகள் பதிவாகியதாக, இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையானது, இன்று நடைபெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு, 36 தொகுதிகளில் வெற்றி தேவை.
டெல்லி ஒன்றிய பிரதேசமாக இருந்தாலும், சட்டப்பேரவையை கொண்டுள்ள சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளது. சட்டப்பேரவையில் 70 தொகுதிகள், மக்களவையில் 7 தொகுதிகள் என குறைந்த அளவில் இருந்தாலும், இந்திய நாட்டின் தலைநகரமாகவும் இருப்பதால், மிகுந்த அதிகாரம் உள்ள இடமாக, டெல்லி திகழ்வதாக பார்க்கப்படுகிறது.
இத்தேர்தலில் ஆட்சியில் இருக்கும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையேயான மும்முனை போட்டி இருந்தது.
இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், ஆரம்பம் முதலே பாஜக முன்னிலை வகித்து வந்தது.
டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. இதில் ஒரு தொகிதிகளில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாதது, கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், பெரும்பான்மைக்கு 36 தொகுதிகளுக்கும் அதிகமாக வெற்றி பெற்ற பாஜக, ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது.
இந்த தருணத்தில், 1993- 1998 ஆகிய ஆண்டுகளில் பாஜக ஆட்சி அமைத்திருந்த நிலையில், தற்போது, மீண்டும் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

