Delhi Election Result 2025 LIVE: பாஜக வசம் தலைநகரம் - முக்கிய தலைகளை இழந்த ஆம் ஆத்மி, யார் யார் தெரியுமா?
Delhi Election Result 2025 LIVE Updates:பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இரண்டும் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதில் நம்பிக்கையை வெளிப்படுத்தி உறுதியாக உள்ளன.
LIVE

Background
Delhi Election Result 2025 LIVE: அமித் ஷா மகிழ்ச்சி
Delhi Election Result 2025 LIVE: உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “தொடர்ச்சியான பொய் வாக்குறுதிகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்த முடியாது என்பதை டெல்லி மக்கள் காட்டியுள்ளனர். அசுத்தமான யமுனை, அசுத்தமான குடிநீர், உடைந்த சாலைகள், நிரம்பி வழியும் சாக்கடைகள் மற்றும் ஒவ்வொரு தெருவிலும் திறக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகள் ஆகியவற்றிற்கு பொதுமக்கள் தங்கள் வாக்குகளால் பதிலளித்துள்ளனர். டெல்லியில் இந்த மகத்தான வெற்றிக்காக இரவும் பகலும் உழைத்த அனைத்து பாஜக தொண்டர்களையும் நான் மனதார வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
Delhi Election Result 2025 LIVE: கெஜ்ரிவாலை வீழ்த்தி பர்வேஷ் கொண்டாட்டம்
Delhi Election Result 2025 LIVE: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பிறகு, புது டெல்லி சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா தனது வெற்றியை தொண்டர்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.
#WATCH | BJP candidate from New Delhi assembly seat Parvesh Verma celebrates his victory after he defeats AAP national convener and former Delhi CM, Arvind Kejriwal#DelhiElection2025 pic.twitter.com/Z20ZjMM81m
— ANI (@ANI) February 8, 2025
Delhi Election Result 2025 LIVE: முதலமைச்சர் வெற்றி
Delhi Election Result 2025 LIVE: டெல்லி சட்டமன்ற தேர்தலில் கல்கஜி தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் அதிஷியின் வெற்றி உறுதியாகியுள்ளது.
Delhi Election Result 2025 LIVE: ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் தோல்வி?
Delhi Election Result 2025 LIVE: அர்விந்த் கெஜ்ரிவால் மட்டுமின்றி, தற்போதைய முதலமைச்சர் அதிஷியும் தான் போட்டியிடும் தொகுதியில் பாஜக வேட்பாளரிடம் பின்னடைவை சந்தித்துள்ளார். அதேபோன்று, மூத்த அமைச்சரான மணிஷ் சிசோடியாவும் தோல்வி முகத்தில் உள்ளார்.
Delhi Election Result 2025 LIVE: கெஜ்ரிவால் தோல்வி
Delhi Election Result 2025 LIVE: 10 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், அரவிந்த் கெஜ்ரிவால் 1,800 வாக்குகள் பின்னடைவில் உள்ளார். பாஜக வேட்பாளருடனான வாக்கு வித்தியாசத்தை காட்டிலும், இனியும் எண்ணப்பட வேண்டிய வாக்குகள் குறைவாக இருப்பதால் கெஜ்ரிவாலின் தோல்வி உறுதியாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

