மேலும் அறிய

Delhi Election Result 2025: ஹாட்ரிக் டக்-அவுட்டா? கணக்கை தொடங்குமா காங்கிரஸ்? டெல்லியில் தொண்டர்கள் ஏக்கம்..!

Delhi Election Result 2025 Congress: டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஹாட்ரிக் டக்-அவுட்டை தவிர்க்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Delhi Election 2025 Result Congress:  டெல்லியில் கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது குறிப்பிடத்தக்கது.

டெல்லி சட்டமன்ற தேர்தல்:

டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில், பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  கடந்த இரண்டு தேர்தல்களிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத காங்கிராஸ்,  இந்த முறை தனது வெற்றிக் கணக்கைத் திறக்கக்கூடும் என்பதைக் காட்டும் சமீபத்திய போக்குகள் உள்ளன. ஆரம்பகட்ட தரவுகளின்படி, முன்னர் ஆளும் ஆம் ஆத்மி கட்சி (AAP) வசம் இருந்த பத்லி தொகுதியில் காங்கிரஸ் கட்சி தற்போது முன்னிலை வகிக்கிறது. 

ஹாட்ரிக் டக்-அவுட்?

காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கும் பத்லி தொகுதியில் அக்கட்சி சார்பில், மாநில தலைவர் தேவேந்திர யாதவ் போட்டியிட்டுள்ளார். அவருக்கு எதிராக ஆம் ஆத்மி சார்பில் அஜேஷ் யாதவ், பாஜக சார்பில் தீபக் சவுத்ரி ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.  பல தேர்தல் கருத்துகணிப்புகள் தொடர்ந்து மூன்றாவது முறையாக, இந்த தேர்தலிலும் காங்கிரசுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என கணித்தன. இதனை பொய்யாக்கும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் டெல்லியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டன. ஆனாலும், வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே அக்கட்சியால் முன்னிலை பெற முடிந்துள்ளது.

கடைசி வெற்றி எப்போது?

2013ம் ஆண்டு வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்தது. அரசின் மோசமான செயல்பாடுகளால் மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தியால் அக்கட்சி ஆட்சியை இழந்தது. 2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கடைசியாக காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது 28 இடங்களை வென்ற ஆம் ஆத்மி, காங்கிரஸ் உடன் கைகோர்த்து ஆட்சி அமைத்தது. ஆனால், அந்த அரசு வெறும் 49 நாட்களில் கவிழ்ந்தது. அதைதொடர்ந்து, 2015 மற்றும் 2020ம் ஆண்டுகளில் நடைபெற்ற, பொதுத்தேர்தல்களில் ஒரு இடத்தை கூட காங்கிரஸால் கைப்பற்ற முடியவ்ல்லை. அதேநேரம், தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி கட்சி அடுத்தடுத்து இரண்டு தேர்தல்களிலும் வென்று, ஆட்சியை கைப்பற்றியது. 

27 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் 

இந்நிலையில் டெல்லி சட்டமன்ற தேர்தலில் கடந்த 5ம் தேதி பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. அதில் பெரும்பான்மைக்கு தேவையான 36 இடங்களை காட்டிலும், கூடுதலான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இதனால், 10 ஆண்டுகளாக நிடித்த ஆம் ஆத்மியின் ஆட்சிக்கு முடிவு கட்டி, 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் டெல்லியில் ஆட்சி அமைக்க உள்ளதாக தெரிகிறது. விரைவில் புதிய முதலமைச்சர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget