மேலும் அறிய

பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்த வருடம் முக்கியமாக ரோபோடிக்ஸ் பயிற்சி பட்டறை, அறிவியலும் அற்புதமும் மேஜிக் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் , உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் இணைந்து அறிவியல் திருவிழாவை கடந்த 14 வருடங்களாக உடுமலை பகுதியில் நடத்தி வருகிறது.

அதுபோல இவ்வருடமும் அறிவியல் திருவிழாவை திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் இணைந்து வருகின்ற 28-02-2026 (சனி) மற்றும் 01-03-2026 (ஞாயிறு) ஆகிய நாட்களில் உடுமலை, வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்தத்  திட்டமிட்டுள்ளதாக கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் தெரிவித்துள்ளார்.

 பள்ளி மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையையும் ஆராய்ச்சி மனப்பான்மையையும் வளர்க்கும் வண்ணம் மாணவர்களுக்கு பேச்சு, அறிவியல் வினாடி வினா, பேச்சு, கட்டுரை, ஓவியம், அறிவியல் புதுமைப் படைப்புகள் கண்காட்சி போன்ற தனித்திறன் போட்டிகளை அந்நாளில் நடத்தி வருகிறோம்.

அத்துடன் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த வருடம் முக்கியமாக ரோபோடிக்ஸ் பயிற்சி பட்டறை, அறிவியலும் அற்புதமும் மேஜிக் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் :

சி.எஸ்.ஐ.ஆர்- NIIST, இயக்குனர் ,உடுமலையின் விஞ்ஞானி- நம்ம ஊரு விஞ்ஞானி ராஷ்ட்ரிய புரஸ்கார் விருது பெற்ற முனைவர் அனந்தராமகிருஷ்ணன் மாணாக்கர்களோடு  கலந்துரையாட உள்ளார். கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி பொன்ராஜூ ஆகியோர் மாணாக்கர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.

அறிவியல் விழிப்புணர்வு போட்டிகள்- போட்டிகள் விவரம்

நேரம்: 28.02.2026 (சனிக்கிழமை) மதியம் 12.00  மணி

”அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த புதுமைப்படைப்புகள் கண்காட்சி”

Ø (1-5) ( 6 ,7 ,8 வகுப்பு )  (9 ,10 வகுப்பு)  மற்றும்; ( 11, 12 வகுப்பு) ஆகிய நான்கு பிரிவுகளாக கண்காட்சி நடைபெறும்.

Ø எளிய அறிவியல் சோதனைகளை செய்து காண்பித்து விளக்குமாறு புதுமையான அறிவியல் படைப்புகளை தயார் செய்து கொண்டு வரலாம்.

Ø அறிவியல் சிந்தனை , இந்தியாவின் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சி, விண்வெளித் துறை, விவசாயம், சுற்றுச்சூழல் போன்ற அறிவியல் சார் தலைப்புகளில் புதுமைப்படைப்புகளை தயார் செய்து கொண்டு வரலாம்.

Ø சிறந்த படைப்புகளுக்கு தொலைநோக்கி, பைனாகுலர், ரோபோடிக்ஸ் தொகுப்பு, மடிப்பு நுண்ணோக்கி போன்ற அறிவியல் சார் பொருட்கள் பரிசுகளாக வழங்கப்படும். அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

 அறிவியல் வினாடி வினா :

இந்திய விஞ்ஞானிகளான ஹோமி ஜெ.பாபா, விக்ரம் சாராபாய், சர்.சி.வி.ராமன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், புவி வெப்பமாதல், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) ஆகிய தலைப்புகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

  பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள் :

1 முதல் 5 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு : அறிவியல் வளர்ச்சியின் அற்புதங்கள்

6 முதல் 8 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு : உனக்கு பிடித்த இந்திய பெண் விஞ்ஞானி

9-10 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு: தேசிய பாதுகாப்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு

11-12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு: காலநிலை மாற்றமும் எதிர்கொள்ளும் சவால்களும்

 ஓவியப்போட்டிக்கான தலைப்புகள் :  

1 முதல் 5 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு : உனக்கு பிடித்த அறிவியல் கண்டுபிடிப்பு

6 முதல் 8 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு : புவி வெப்பமாதலும் பாதுகாப்பும்

9-10 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு: குகை மனிதனில் இருந்து விண்வெளி வீரர் - பரிணாம வளர்ச்சி

11-12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு: 2047-இல் மேம்படுத்தப்பட்ட நகரங்கள் -உனது பார்வை

பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!

 கட்டுரைப்போட்டிக்கான தலைப்புகள்:

 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு : சர் .சி .வி. ராமனின் கண்டுபிடிப்புகள்

 9-10 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு: நிலையான எதிர்காலத்தை உருவாக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு

 11-12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு: கழிவு மேலாண்மைக்கு உனது யோசனைகள்

 போட்டிகளில் வெற்றிபெறும் மாணாக்கர்களுக்கு பரிசுகளும் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.  வெற்றி பெறும் மாணாக்கர்கள் அறிவியல் களப்பயணமாக அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

 போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து மாணாக்கர்களும் பயிற்சி பட்டறைகளில் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்ய கடைசி தேதி 27.2.2026.

 பதிவு செய்ய :  8778201926,8883535380 ,9965644666

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
Embed widget