ஒவ்வொரு முறையும் இந்த கருத்துக்கணிப்பு முறை மேம்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. எனினும் பெரும்பாலான நேரங்களில் கருத்துக் கணிப்பு முடிவுகள் தவறாக இருந்திருக்கின்றன. சில நேரங்களில் இவை துல்லியமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
Elections 2024 Exit Poll
லோக்சபா தேர்தல் கருத்துக்கணிப்பு
FAQs
கருத்துக் கணிப்பின் துல்லியத் தன்மை எப்படி?
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்றால் என்ன?
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்பது தேர்தலில், வாக்காளர்கள் எந்தக் கட்சிக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்று பலதரப்பட்ட மக்களிடம் கேட்கும் சர்வே ஆகும். இது தேர்தலுக்கு முன்பு நடைபெறும், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புடன் (opinion poll) வேறுபடும். எந்தக் கட்சி எவ்வளவு வெல்லும் என்பது குறித்த ஓர் அறிமுகத்தை அளிக்கவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது.
எப்படி நடத்தப்படுகிறது?
பெரும்பாலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், சாம்பிள்களைச் சேகரித்தே நடத்தப்படுகின்றன. இவை, ஒரு குறிப்பிட்ட கட்சி குறித்தோ அதன் கடந்தகால செயல்பாடுகள் பற்றியோ ஒரு குடிமகன் என்ன நினைக்கிறார் என்ற கேள்விகளை உள்ளடக்கி இருக்கும்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எப்போது தொடங்கப்பட்டன?
முதன்முதலில் இந்தியாவில் 1957ஆம் ஆண்டு இந்திய பொதுமக்கள் கருத்து நிறுவனம் (Indian Institute of Public Opinion) சார்பில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இரண்டாவது மக்களவைத் தேர்தலின்போது இது நடத்தப்பட்டது. எனினும் தொலைக்காட்சிக்கான வரவேற்பு அதிகரித்தபிறகு, முதல்முறையாக1980களில் முறையான ’எக்ஸிட் போல்’ நடத்தப்பட்டது.
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்றால் என்ன? ( pre-poll and post-poll surveys)
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் பொதுவாக, வரப்போகும் தேர்தலில், யாருக்கு வாக்காளர்கள் வாக்களிக்கப் போகிறார்கள், ஏன் என்பன உள்ளிட்ட கேள்விகளை முன்வைக்கும். பிந்தைய கருத்துக் கணிப்புகளில் இதே கேள்விகள் தேர்தலுக்குப் பிறகு முன்வைக்கப்படும்.
எக்ஸிட் போல் குறித்த தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகள் என்ன?
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து, கடைசிக் கட்டத் தேர்தல் நடைபெற்று முடியும்வரை, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக் கூடாது. 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 126ஏ பிரிவின்படி, எந்த ஒரு நபரும் அச்சு அல்லது மின்னணு ஊடகத்திலோ, வேறு எந்தவிதமான முறையிலோ தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடக் கூடாது.