Delhi Election Result: ஒரு தொகுதியிலும் வெற்றியில்லை! வீணாகியதா ராகுல் காந்தியின் முயற்சிகள்?
Delhi Election Result: டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்கான காரணங்கள் என்ன?

டெல்லி சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் கட்சி ஹரியானா, மஹாராஷ்டிரா, ஜம்மு& காஷ்மீர் என சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவர்கள் கூட தேர்தலில் மக்களின் நம்பிக்கையை பெறவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி கடைசியாக நடைபெற்ற மூன்று தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி ஒரு இடங்களை கூட பெறவில்லை. 1990-களில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு காங்கிரஸ் கட்சி டெல்லி தேர்தலில் வெற்றி பெறவில்லை. பா.ஜ.க. 1998-க்குப் பிறகு டெல்லியில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. 2024- தேர்தலிலும் காங்கிரஸ் ஒரு இடங்களை கூட பெறவில்லை என்பது காங்கிரஸ் கட்சி அரசியல் களத்தில் செய்ய பணிகள் அதிகம் உள்ளதை சுட்டிக்காட்டுகிறது. காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டு தேர்தல் வரலாற்றை பார்த்தால், தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. 2014-ம் ஆண்டில் இருந்து நாட்டில் நடைபெற்ற 63 மாநில சட்டமன்ற தேர்தலில் 48 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. 2013-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி தேர்தலில் காங்கிரஸ் 8 தொகுதியில் வெற்றி பெற்றிருந்தது. 2015-ல் காங்கிரஸ் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற்றவில்லை. 9.7% வாக்குகளை பெற்றது. 2020 தேர்தலில் 4.26% வாக்குகளை பெற்றது. 2025-ல் 6.36% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.
2024- மக்களவைத் தேர்தலும் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றே சொல்லலாம். 2009-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி மக்களவையில் பெரிய அளவிலான இடங்களை பெறவில்லை. தேர்தலில் கிடைத்த பாடங்களைப் பெற்று காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஹரியானா 37, ஜார்காண்ட் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் 16 இடங்கள் என பெற்றும் தோல்வி அடைந்தது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈட்பட்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சியின் காலம் 43 இடங்களில் இருந்து 8 ஆக குறைந்தபோதே முடிந்துவிட்டது.
दिल्ली का जनादेश हम विनम्रता से स्वीकार करते हैं।
— Rahul Gandhi (@RahulGandhi) February 8, 2025
प्रदेश के सभी कांग्रेस कार्यकर्ताओं को उनके समर्पण और सभी मतदाताओं को उनके समर्थन के लिए दिल से धन्यवाद।
प्रदूषण, महंगाई और भ्रष्टाचार के विरुद्ध - दिल्ली की प्रगति और दिल्लीवासियों के अधिकारों की यह लड़ाई जारी रहेगी।
டெல்லி தேர்தலில் காங்கிரஸ் தோல்வி ஏன்?
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா 2024-ல் மக்களவைத் தேர்தலில் சிறிது உதவினாலும் பா.ஜ.க.-வை வீழ்த்துவதற்கு உதவவில்லை.
தலைவர்கள் தேர்வில் குழப்பம்:
டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முகமாக இருக்க குறிப்பிடத்தகுந்த நபர் என யாரும் இல்லை. ஷீலா தீக்ஷித்திற்கு பிறகு, டெல்லியில் காங்கிரஸின் முகம் என இதுவரை யாரும் இல்லை என்பது ஒன்று. அரவிந்த் கெஜ்ரிவால், மனோஜ் திவாரி ஆகியோரின் இன்ஃப்ளுயன்ஸ் உடன் போட்டிபோடும் அளவிற்கு யாரும் முன்னிருத்தப்படவில்லை. 2025- தேர்தலுக்கு காங்கிரஸ் தேர்தல் வேட்பாளரை கூட அறிவிக்கவில்லை. மக்களிடம் நம்பிக்கையை பெற காங்கிரஸ் பெரிதாக எதுவும் செய்யவில்லை.
ஆம் ஆத்மி எழுச்சி:
மக்கள் மாற்றத்தை விரும்பியபோது, ஆம் ஆத்மி கட்சி தங்களை மக்களிடம் கொண்டு சென்றது. டெல்லி அரசின் புதிய முகமாக ஆம் ஆத்மி கட்சி அவர்களை முன்னிருத்தியது. தேர்தலில் கிடைத்த தோல்விகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தீவிரமாக செயல்படாமல் போனதும் அவர்களை மக்கள் நம்பாததற்கு காரணமாகிவிட்டது.
கூட்டணியில் குழப்பம்:
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி I.N.D.I.A. கூட்டணியில் இருந்தது. டெல்லி சட்டமன்ற தேர்தலில் இருவரும் தனித்துப் போட்டியிட்டது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸிற்கு ஆதரவு குறைய வாய்ப்பாக அமைந்தது.
பிரச்சனையில் கவனம் இல்லை:
டெல்லியில் உள்ள காற்றுமாசு உள்ளிட்ட பல பிரச்சனைகளை சரியாக புரிந்துகொண்டு அதற்கான தீர்வு குறித்து மக்களிடம் பேசாமல் போனது, மக்களின் நலனுக்கான காங்கிரஸ் திட்டங்கள், மக்களின் சாவல்களை சரிசெய்ய காங்கிரஸ் என்ன செய்ய போகிறது ஆகியவற்றை மக்களிடம் தெளிவாக விளக்கி சொல்ல தவறியதும் காங்கிரஸ் தோல்விக்கு காரணமாகிவிட்டது.
दिल्ली विधानसभा चुनाव में कांग्रेस पार्टी ने जनहित में सत्ता के ख़िलाफ़ माहौल बनाया पर जनता ने हमें उम्मीद के अनुरूप जनादेश नहीं दिया। हम जनमत को स्वीकारते हैं।
— Mallikarjun Kharge (@kharge) February 8, 2025
कांग्रेस के हर एक नेता और कार्यकर्ता ने एकजुट होकर, विपरीत परिस्थितियों में मेहनत की, पर अभी और कड़ी मेहनत और संघर्ष…
அரவிந்த் கெஜ்ரிவால் தோல்விக்கு சந்தீப் தீக்ஷித் காரணமா?
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்ட புது டெல்லி தொகுதியில் பா.ஜ.க.-வின் பர்வேஷ் வர்மாவிடம் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஜெக்ரிவால் 25,999 வாக்குகள் பெற்றிருந்தார். பர்வேஷ் வர்மா 30,088 வாக்குகள் பெற்றிருந்தார். காங்கிரஸின் சந்தீப் தீக்ஷித் 4,568 வாக்குகள் பெற்றார். ஆம் ஆத்மி, காங்கிரஸ் இருவரும் கூட்டணியில் இருந்திந்தால் சந்தீப் தீக்ஷித்தின் வாக்குகள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உதவியிருக்கும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பா.ஜ.க.-வை விட 479 வாக்குகள் பெற்று வென்றிருக்கலாம்.
டெல்லி தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி களத்தில் கடினமாக உழைக்க வேண்டும் என்பதை காட்டுக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

