Dharmapuri collector : ”என்ன பண்ணிட்டு இருக்கீங்க” LEFT&RIGHT வாங்கிய கலெக்டர்! ஷாக்கான POLICE
காவல்நிலையத்திற்கு வந்த தருமபுரி கலெக்டர் சாந்தி பெண் காவலர்களை ரெஃப்ட் ரைட் வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க நேரம் இல்லாத அளவிற்கு வழக்குகள் இருக்கிறதா என கறாராக பேசினார்.
தமிழக முழுவதும் உங்கள் ஊரில், உங்களை தேடி என்ற திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் மாவட்ட தலைநகரங்களில் பணிபுரியக்கூடிய அனைத்து துறை அலுவலர்களும், மக்களை தேடிச் சென்று அவர்களது குறைகளை கேட்டு அறிந்து அதனை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதனை அடுத்து தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் இன்று உங்கள் ஊரில் உங்களைத் தேடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார்.
அப்பொழுது மொரப்பூர் காவல் நிலையத்திற்குள் திடீரென நுழைந்து ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். வழக்கு பதிவு செய்வதோடு, நிறுத்தி விடாமல் அதனை முழுமையாக விசாரணை செய்து அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். அப்போது போக்சோ வழக்குகள் மற்றும் போதைப்பொருள் விற்பனை குறித்த வழக்குகள் குறித்த விவரங்களை பார்வையிட்டார்.
இவ்வளவு பேர் பணியாற்றி வந்தும், போக்சோ குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதேபோல் பள்ளியில் படிக்கின்ற பருவங்களில் காதல் திருமணம் போன்ற சம்பவங்கள் நடைபெற்றால், அந்தப் பகுதியில் ஏன் விழிப்புணர்வு கொடுப்பதில்லை என்றும் காவல்துறையினரை கடுமையாக கண்டித்தார்.