Gold Rate on Budget Day: அடங்க மறுக்கும் தங்கம்...பட்ஜெட் அன்றும் விலை உயர்ந்தது...
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் இன்றைய தினத்திலும், தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமிற்கு 15 ரூபாய் அதிகரித்துள்ள நிலையில், 62 ஆயிரம் ரூபாயை நெருங்கியது.

இன்று(01.02.25) மத்திய பட்ஜெட் 2025 தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தங்கம் விலை அதிகரித்துள்ளது. தங்கம் விலை படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பட்ஜெட் அன்றே விலை உயர்ந்துள்ளது, பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை குறையும் என ஆய்வறிக்கையில் தகவல்
மத்திய பட்ஜெட் 2025-ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்யும் நிலையில், நேற்று தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், மதிப்புவாய்ந்த உலோகங்களில், தங்கத்தின் விலை குறையும், ஆனால் வெள்ளியின் விலை அதிகரிக்கும் என தெரிவித்திருந்தார். துத்தநாகம், இரும்புத்தாது ஆகியவற்றின் விலை குறைவதால், கனிமங்களில் விலை குறையும் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பட்ஜெட் அன்றே அதிகரித்த தங்கத்தின் விலை
இந்த நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் அன்றே, தங்கத்தின் விலை கிராமிற்கு 15 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை 7,745 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 120 ரூபாய் அதிகரித்து, சவரன் 61,960 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 62,000 ரூபாயை எட்டிவிட்டதால், பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். இந்த விலை ஏற்றம் எங்கு போய் நிற்குமோ எனவும் கலக்கமடைந்துள்ளனர். தற்போது கல்யாண சீசன் என்பதால், கல்யாண வீட்டார் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

