Budget 2025 LIVE: ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் வரை உள்ளபவர்களுக்கு வருமான வரி கிடையாது - நிர்மலா அறிவிப்பால் மக்கள் இன்ப அதிர்ச்சி
Union Budget 2025 LIVE Updates: மத்திய அரசின் 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் உடனுக்குடன் அப்டேட்களை கீழே விரிவாக காணலாம்.

Background
Union Budget 2025 LIVE Updates in Tamil:
ஒட்டுமொத்த நாடே எதிர்பார்க்கும் 2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செயயப்பட இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மத்திய நிதிநிலை அறிக்கை:
இதற்கான பணிகள் ஏற்கனவே விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய நிதிநிலை அறிக்கையைப் பொறுத்து நாடு முழுவதும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களின் விலைகள் ஏற்றத்தையும், இறக்கத்தையும் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தொலைநோக்கு சிந்தனையுடன் இந்த பட்ஜெட் இருக்கும் என்று பா.ஜ.க. நிர்வாகிகளும், பா.ஜ.க. ஆதரவாளர்களும் கணித்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பது வருமான வரியில் மாற்றத்தையே பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
பெரும் எதிர்பார்ப்பு:
இந்த பட்ஜெட்டில் வருமான வரி கணக்கு தாக்கல் நடைமுறையில் பெரும் மாற்றங்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிவியல், விண்வெளி, பாதுகாப்பு போன்ற அம்சங்களுக்காக தொலைநோக்கு பார்வையுடன் அதிக நிதி ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மக்களின் அத்தியாவசியம் மற்றும் அடிப்படையான கல்வி, விவசாயம், சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு பெரும் அளவு நிதி ஒதுக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மத்திய பட்ஜெட் நாட்டிற்கானது அல்ல - தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை
மத்திய பட்ஜெட் நாட்டிற்கானது அல்ல என்றும், ஒரு சாரருக்கானது என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
1.70 கோடி விவசாயிகளுக்கு 100 மாவட்டங்களில் விவசாய உற்பத்தியை பெருக்கும் திட்டம் - நிர்மலா சீதாராமன்
1.70 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 100 மாவட்டங்களில் விவசாய உற்பத்தியை பெருக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.




















