Budget 2025 Expenditure: மத்திய பட்ஜெட் - எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? மொத்த வருவாய், செலவு விவரங்கள், கடன் இலக்கு?
Budget 2025 Expenditure Report: மத்திய அரசின் பட்ஜெட்டில் எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Budget 2025 Expenditure Report: மத்திய அரசின் பட்ஜெட்டில் எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
மத்திய பட்ஜெட் 2025-26:
நாட்டின் 2025-26 நிதியாண்டிற்கான வரவு- செலவு திட்டங்களை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதில் நடுத்தர மக்களை சந்தோஷப்படுத்தும் விதமாக, ரூ.12 லட்சம் வரையிலான வருவாய்க்கு விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிப்பு இடம்பெற்றது. அதேநேரம், பாஜக கூட்டணி ஆட்சியில் முக்கிய பங்கு வகிப்பதால், பீகார் அரசுக்கு பட்ஜெட்டில் அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் நாட்டின் நிதிநிலைமை, எந்த துறைக்கு எவ்வளவு நிதி என்பது போன்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மத்திய அரசின் நிதி நிலை:
1. மொத்த வரவுகள் - ரூ 31.47 லட்சம் கோடி
2. நிகர வரி வரவுகள் - ரூ 25.57 லட்சம் கோடி
3. மொத்த செலவு - ரூ 47.16 லட்சம் கோடி
4. மூலதனச் செலவு - ரூ 10.18 லட்சம் கோடி
எவ்வளவு கடன் வாங்க திட்டம்?
நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து, பத்திரங்கள் மூலமாக ரூ.11.54 லட்சம் கோடி கடனாக வாங்கப்பட உள்ளது. பற்றக்குறைக்கான மீத தொகையானது சிறு சேமிப்பு மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த சந்தை கடன்கள் ரூ.14.82 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் 4.9 சதவிகிதமாக கணிக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறை, அடுத்த நிதியாண்டில் ஜிடிபியில் 4.8 சதவிகிதமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?
- பாதுகாப்பு துறைக்கான நிதி - ரூ.4,91,732 கோடி
- ஊரக வளர்ச்சி துறைக்கான நிதி - ரூ.2,66,817 கோடி
- உள்துறை விவகாரம் - ரு.2,33,211 கோடி
- விவசாயம் மற்றும் அதுசார்ந்த செயல் - ரூ.1,71,437 கோடி
- கல்வி - ரூ.1,28,650 கோடி
- மருத்துவம் - ரூ.98,311 கோடி
- நகர வளர்ச்சி - ரூ.96,77 கோடி
- ஐடி & தொலைதொடர்பு துறை - ரூ.95,298 கோடி
- மின்சாரம் - ரூ.81,174 கோடி
- வணிகம் & தொழில்துறை - ரூ.65,553 கோடி
- சமூக நீதி - ரூ.60,052 கோடி
- ஆராய்ச்சி துறை - ரூ. 55,679 கோடி
ஒரு ரூபாயில் நாட்டின் வருமானம்:
- வருமான வரி - 22 பைசா
- தொழிற்சங்க கலால் வரிகள் - 5 பைசா
- ஜிஎஸ்டி & இதர வரிகள் - 18 பைசா
- கார்ப்ரேஷன் வரி - 17 பைசா
- சுங்கவரி - 4 பைசா
- கடன் அல்லாத மூலதன வருவாய் - 1 பைசா
- வரி அல்லாத வருவாய் - 9 பைசா
- கடன் மற்றும் இதர வருவாய் - 24 பைசா
ஒரு ரூபாயில் நாட்டின் செலவினம்:
- ஓய்வூதியம் - 4 பைசா
- இதர செலவினங்கள் - 8 பைசா
- மத்திய அரசு திட்டங்கள் - 8 பைசா
- நிதி ஆணைக்குழு மற்றும் பிற இடமாற்றங்கள் - 8 பைசா
- மாநிலங்களுக்கான வரி பகிர்வு - 22 பைசா
- பாதுகாப்பு - 8 பைசா
- முக்கிய மானியங்கள் - 6 பைசா
- இதர மத்திய அரசு திட்டங்கள் - 16 பைசா
- வட்டி - 20 பைசா





















