Biggest Murugan Statue: "உலகின் மிகப்பெரிய முருகன் சிலை"அறிவித்த சேகர்பாபு.. உற்சாகத்தில் பக்தர்கள்
ஆசியாவிலேயே மிகப்பெரிய முருகன் சிலை மருதமலையில் அமைய உள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளது முருக பக்தர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்க் கடவுள் முருகனுக்கு இருக்கும் அறுபடை வீடுகளைப்போலவே கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலும் பிரபலமானது. இந்த கோவிலுக்கு தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு ஊர்களிலும் இருந்தும் பக்தர் செல்வது வழக்கம். கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருவதால் இந்து சமய அற நிலையத்துறை பல்வேறு வசதிகளை இங்கே செய்ய திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒருபகுதியாக ராஜ கோபுரம் அமைக்கும் பணிக்கான நடவடிக்கையும், கோவில் வளாகத்தில் கொடிமரம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய முருகன் சிலையை மருதமலையில் அமைக்கக்க உள்ளதாக இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குட் நியூஸ் ஒன்றை சொல்லியிருக்கிறார்.
அதில்,”திமுக ஆட்சியில் 2400 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றிருக்கிறது.
முதல்கட்டமாக 7 முருகன் கோயில்கள் பெருந்திட்ட வரைவுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, திருச்செந்தூர், பழநி , திருத்தனி , மருதமலை முருகன் கோயிலில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.மருதமலை முருகன் கோயிலில் 160 அடிக்கு கல்லால் ஆன முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்த சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யபட்டு வருகின்றன.
ஆசியாவில் அதிக உயரம் கொண்ட சிலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.”என்று கூறியுள்ளார். சேலம் அருகே உள்ள முத்துமலையில் 146 அடி முருகர் சிலையும் , 140 அடி மலேசிய பத்துமலை யில் முருகருக்கு சிலையும் உள்ள நிலையில் மருதமலையில் 160 அடி முருகர் சிலை அமைக்கப்படும் என்ற தகவல் முருக பக்தர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.





தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

