Cellphone Theft : ’’அண்ணே..1 சிக்கன் ரைஸ்’’செல்போனை திருடிய வாலிபர்..பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
திருப்பத்தூர் அருகே சிக்கன் ரைஸ் வாங்குவது போல் நடித்து கடை உரிமையாளரின் செல்போனை அலேக்காக திருடிய வாலிபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் சேர்மன் துறை சாமி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் திருப்பத்தூர் வழியாக கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் சிக்கன் ரைஸ் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது மேசை மீது தனது விலை உயர்ந்த செல்போனை மேசையின் மீது வைத்திருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிக்கன் ரைஸ் வாங்குவது போல் நடித்து மேசைன் மீது வைத்திருந்த செல்போனை அலேக்காக திருடி சென்றுள்ளார்.இதன் காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவாகியுள்ளது. இந்த சம்பவ குறித்து ரமேஷ் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை தேடி வருகின்றனர்.
ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையிலும் அசால்ட்டாக வாலிபர் ஒருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது