Khushbu resigns from NCW | ”ரீஎண்ட்ரி குடுக்க ரெடி” குஷ்பு ராஜினாமா! காரணம் என்ன?
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார் குஷ்பு. ராஜினாமா செய்தது ஏன் என்பது தொடர்பாகவும் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு, 2010ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அங்கிருந்து விலகிய அவர் 2014ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் காங்கிரஸில் இருந்து விலகிய அவர், 2020ல் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 2021 சட்டப்பேரவை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் களமிறங்கிய அவர் தோல்வியை தழுவினார். கட்சியில் இணைந்த உடனேயே அவருக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 2023ம் ஆண்டு அவருக்கு தேசிய மகளிர் ஆணைய பதவி கிடைத்தது. ஆனால் மணிப்பூர் பாலியல் விவகாரம், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் போன்ற விஷயங்களில் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காதது பட்டியலின மக்களவை அவமதிக்கும் வகையில் பேசியது என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கினார். மகளிர் ஆணையத்தில் இருந்து கொண்டே பெண்கள் பிரச்னைகள் பற்றி பேசாமல் இருப்பதாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது அவரது ஆதரவாளர்கள் மற்றும் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘அரசியலில் 14 ஆண்டுகால அர்ப்பணிப்புக்கு பிறகு இன்று இதயப்பூர்வமான மாற்றத்தை உணர்கிறேன். பாஜகவுக்கு முழுமையாக பணியாற்றுவதற்காக தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து ராஜினாமா செய்துள்ளேன். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். என்னுடைய விசுவாசமும், நம்பிக்கையும் எப்போதும் பாஜக உடன்தான் இருக்கும். முன்எப்போதும் இல்லாத உற்சாகத்துடன் நான் மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துவிட்டேன். தேசிய மகளிர் ஆணையத்தில் இருந்ததால் எனக்கு சில கட்டுப்பாடுகள் இருந்தன.
தி.மு.க.வில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய குஷ்பு, பின்னர் காங்கிரசுக்கு சென்றார். அங்கிருந்து காங்கிரஸ் கட்சியில் 2014ம் ஆண்டு இணைந்தார். பின்னர், காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது சுதந்திரமாக முழு மனதுடன் எனது கட்சிக்கு சேவை செய்ய முடியும். வதந்தி பரப்புபவர்கள் அமைதியாக உறங்குங்கள். நான் மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துள்ளது நேர்மையானது மற்றும் கட்சி மீதும் மக்கள் மீதும் நான் கொண்ட பிரிக்க முடியாத அன்பின் காரணமாக நடந்துள்ளது” என கூறியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலிலும் பா.ஜ.க.விற்கு ஆதரவாக பெரியளவில் ஏதும் அரசியல் பரப்புரைகளில் குஷ்பு ஈடுபடவில்லை. சமீபகாலமாக அரசியல் நடவடிக்கைகளில் தன்னை பெரியளவில் ஈடுபடுத்திக் கொள்ளாத குஷ்பு கட்சிப் பணிகளுக்காக தற்போது மகளிர் ஆணைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.