மேலும் அறிய

பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லையா? மறுப்பு தெரிவித்த MTC

சக உயர் அதிகாரிகளால் பெண் ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சில நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும் என MTC விளக்கம் அளித்துள்ளது.

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பின்மை இருப்பதாக நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (MTC) மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லையா?

இதுகுறித்து MTC வெளியிட்ட அறிக்கையில், "சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 362 பெண் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அதில் தலைமை அலுவலகத்தில் மட்டும் 154 பெண் பணியாளர்கள் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில், சக உயர் அதிகாரிகளால் பெண் ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சில நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். இப்போக்குவரத்துக் கழகத்தில் சகப் பணியாளர்களாலும், உயர் அதிகாரிகளாலும் தனக்கு தொந்தரவு இருப்பதாக எந்தவொரு பெண் பணியாளரும் இதுவரை இக்கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள உள்ளக விசாரணைக் குழுவிற்கு புகார் எதுவும் அளிக்கவில்லை.

எனவே, பெண்கள் அளிக்கும் புகாரை பொதுவெளியில் வெளியிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது முற்றிலும் தவறான செய்தியாகும். பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள பெண் பணியாளரின் உயர் அதிகாரியாக தற்போது ஒரு பெண் அதிகாரி தான் பணிபுரிந்து வருகிறார்.

மறுப்பு தெரிவித்த MTC:

இந்நிலையில், சக உயர் அதிகாரிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்திருப்பது தவறான தகவலாகும். மேலும், தனக்கு தொந்தரவு இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை விசாரிக்காமல் அவரை பணியிட மாற்றம் செய்திருப்பதாக தெரிவித்திருப்பது முற்றிலும் தவறானதாகும்.

அவர் இதுவரை எந்த புகாரையும் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் உள்ளக விசாரணைக் குழுவிற்கு அளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை விசாரிக்காமல் அவரை பணி இட மாற்றம் செய்திருப்பதோடு அவருக்கான வருகைப் பதிவையும் பதிவு செய்யாமல் அலைக்கழித்திருப்பதாக தெரிவித்திருப்பது உண்மைக்கு புறம்பானதாகும்.

மேற்கண்ட பணியாளர் தீண்ட காலமாக ஒரே பிரிவில் பணியாற்றி வருகிறார். மற்றும் அப்பணியில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் மட்டுமே அவர் அதே அலுவலக வளாகத்தில் வேறு பிரிவிற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.

அவரது பணியில் குறைபாடு காரணமாக பல்வேறு பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடத்தை விதிகளுக்கு புறம்பாக புதிய பணியிடத்தில் சேர மறுத்து பணிக்கு ஆஜராகத்தால் அவருக்கு வருகைப்பதிவு வழங்கப்படவில்லை.

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் முற்றிலும் பாதுகாப்பான சூழல் உள்ளது என்று உறுதியுடன் தெரிவித்து கொள்ளப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Montha Cyclone: கனமழை எச்சரிக்கை: 6 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
Montha Cyclone: கனமழை எச்சரிக்கை: 6 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
Shreyas Iyer: அச்சச்சோ..! ஸ்ரேயாஸ் அய்யர் ஐசியுவில் அட்மிட் - ரத்தக்கசிவு? மருத்துவர்கள் சொல்வது என்ன?
Shreyas Iyer: அச்சச்சோ..! ஸ்ரேயாஸ் அய்யர் ஐசியுவில் அட்மிட் - ரத்தக்கசிவு? மருத்துவர்கள் சொல்வது என்ன?
TN weather Report: ”மோன்தா” புயல், சென்னை, காஞ்சி, திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட், மிக கனமழை - வானிலை அறிக்கை
TN weather Report: ”மோன்தா” புயல், சென்னை, காஞ்சி, திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட், மிக கனமழை - வானிலை அறிக்கை
Crime: லஞ்சம்லா வேணாம், மனைவிக்கு வேலை போதும்.. ரூ.37 லட்சம் சம்பளம் - ஃப்ராட் கணவனின் தில்லாலங்கடி
Crime: லஞ்சம்லா வேணாம், மனைவிக்கு வேலை போதும்.. ரூ.37 லட்சம் சம்பளம் - ஃப்ராட் கணவனின் தில்லாலங்கடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | அசிங்கப்படுத்திய விஜய்! மகனை பறிகொடுத்த தந்தையை விரட்டியடித்த பவுன்சர்கள்
Shreyas Iyer Injury : ICU-வில் ஸ்ரேயாஸ் ஐயர்!விலா எலும்பில் பலத்த அடி மருத்துவர்கள் சொல்வது என்ன?
Madhampatty Rangaraj Wife| ’’உன் சதி திட்டம் எடுபடாதுகணவரை பறிக்க நினைச்சா..’’ஸ்ருதி பதிலடி!
Montha Cyclone | மழை நிக்குமா? நிக்காதா?ஆக்ரோஷமான மோந்தா புயல்கரையை கடப்பது எப்போது?
Tea Stall Fight CCTV  | ”2 நிமிடம் late..” டீ மாஸ்டர் மீது தாக்குதல் அட்டூழியம் செய்த தந்தை,மகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Montha Cyclone: கனமழை எச்சரிக்கை: 6 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
Montha Cyclone: கனமழை எச்சரிக்கை: 6 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
Shreyas Iyer: அச்சச்சோ..! ஸ்ரேயாஸ் அய்யர் ஐசியுவில் அட்மிட் - ரத்தக்கசிவு? மருத்துவர்கள் சொல்வது என்ன?
Shreyas Iyer: அச்சச்சோ..! ஸ்ரேயாஸ் அய்யர் ஐசியுவில் அட்மிட் - ரத்தக்கசிவு? மருத்துவர்கள் சொல்வது என்ன?
TN weather Report: ”மோன்தா” புயல், சென்னை, காஞ்சி, திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட், மிக கனமழை - வானிலை அறிக்கை
TN weather Report: ”மோன்தா” புயல், சென்னை, காஞ்சி, திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட், மிக கனமழை - வானிலை அறிக்கை
Crime: லஞ்சம்லா வேணாம், மனைவிக்கு வேலை போதும்.. ரூ.37 லட்சம் சம்பளம் - ஃப்ராட் கணவனின் தில்லாலங்கடி
Crime: லஞ்சம்லா வேணாம், மனைவிக்கு வேலை போதும்.. ரூ.37 லட்சம் சம்பளம் - ஃப்ராட் கணவனின் தில்லாலங்கடி
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Montha Cyclone Update: உருவானது ”மோன்தா” புயல் - சென்னையிலிருந்து 600KM தொலைவில், எங்கு? எப்போது? கரையை கடக்கும்?
Montha Cyclone Update: உருவானது ”மோன்தா” புயல் - சென்னையிலிருந்து 600KM தொலைவில், எங்கு? எப்போது? கரையை கடக்கும்?
தனியார் பல்கலைக்கழக திருத்த சட்டம் ரத்து: திரும்பப் பெறுவதாக அறிவிப்பு- பின்னணி என்ன?
தனியார் பல்கலைக்கழக திருத்த சட்டம் ரத்து: திரும்பப் பெறுவதாக அறிவிப்பு- பின்னணி என்ன?
Traffic Diversion: சூரசம்ஹாரம் விழா..பக்தர்கள் கவனத்திற்கு! திருச்செந்தூரில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரம்
Traffic Diversion: சூரசம்ஹாரம் விழா..பக்தர்கள் கவனத்திற்கு! திருச்செந்தூரில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரம்
Embed widget