வேலைக்காரனை விட மோசமாக நடத்தினார்; 17 வயதில் கனகாவை வெறுக்க இது தான் காரணம் - தந்தை உருக்கம்!
கனகா இப்போது வந்தாலும் ஏற்றுக் கொள்வேன் என்று அவரது 80 வயதான தந்தை உருக்கமாக பேசியிருக்கிறார்.

ஒரு காலத்தில் இளசுகளின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் கனகா. 80ஸ் கிட்ஸுகளின் பேவரைட் ஹீரோயின் என கூறலாம். 'கரகாட்டக்காரன்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான கனகா, முதல் படத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதையும் தன்னுடைய அழகால் கொள்ளை கொண்டார்.இந்த படத்தை தொடர்ந்து, பெரிய இடத்து பிள்ளை, அம்மன் கோவில் திருவிழா, வெள்ளைய தேவன், கோயில் காளை, பெரிய குடும்பம், கட்ட பஞ்சாயத்து என்று ஏராளமான படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்தார். சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த கனகா ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து காணாமல் போனார். அவரது அம்மாவின் இழப்பு இவரை மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறப்பட்டது. மேலும் காதல் தோல்வி காரணமாக தன்னை தானே அவர் தனிமை படுத்தி கொண்டதாகவும் கூறப்பட்டது.

சமீபத்தில் இவரது புகைப்படம் ஒன்று வெளியான நிலையில்... அதில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடை கூடி காணப்பட்டார். வீட்டுக்குள் முடங்கி கிடைக்கும் இவரை வெளியே கொண்டு வர... குட்டி பத்மினி உள்ளிட்ட சில பிரபலங்கள் முயன்ற போதிலும் அது முடியாமல் போனது.
இந்த நிலையில் தான் கனகாவின் தந்தை தேவதாஸ் அளித்த பேட்டி ஒன்று... சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் இவர் கூறி உள்ளதாவது, "எனக்கு காதல் திருமணம் தான். நான் என்னுடைய மனைவியை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டேன். ஆனால், அதன் பிறகு என்னுடைய வாழ்க்கை தலைகீழாக மாறியது. எப்படி என்றால் என்னை வேலைக்காரனை விட கேவலமாக நடத்தினார். அப்போது கனகா எல்லாம் பிறந்துவிட்டார். அதன் பிறகும் அப்படித்தான் நடத்தினார். கனகாவிற்கு 3 வயது இருக்கும் போது நான் அவரிடமிருந்து விலகிவிட்டேன். ஆனால் விவாகரத்து பெறவில்லை.
கனகா 17 வயதில் சினிமாவில் நடிக்க வந்தார். ஆனால், அப்போது அவர் படிக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். இதற்காக நான் நீதிமன்றம் வரை சென்றேன். ஆனால், கனகா தனக்கு நடிப்பதில் விருப்பம் இருக்கிறது. அதனால் நான் நடிப்பேன் என்று கூறிவிட்டார். படிப்பதைவிட நடிப்பதில் ஆர்வம் காட்டியதால் நான் கனகாவை வெறுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நான் அவருடைய படங்களை எல்லாம் பார்ப்பதில்லை. எனக்கு இப்போது 88 வயதாகும் நிலையில் அவர் திரும்ப வந்தாலும் நான் அவரை பத்திரமாக பார்த்துக்கொள்வது எனது கடமை என்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





















