Ravi Mohan Photo: கெனிஷாவுடன் மாலையும் கழுத்துமாக ரவி மோகன் எங்க போய் இருக்காரு தெரியுமா?
ஏற்கனவே ரவி மோகன் விவாகரத்து பிரச்சனை ஒரு பக்கம் புகைந்து கொண்டிருக்கும் நிலையில்... தற்போது ரவி மோகனின் புதிய புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னனி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் ரவி மோகன். சினிமாவில் அறிமுகமானதில் இருந்தே எந்த ஒரு காதல் சர்ச்சை மற்றும் நடிகைகளின் கிசுகிசுவில் சிக்காமல் இருந்து வந்த வந்த இவர்... சமீப காலமாக அடிக்கடி அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதற்க்கு காரணம், மனைவி ஆர்த்தியை ரவி மோகன் பிரிவதாக அறிவித்ததும், அதன் பின்னர் பிரபல பாடகி கெனிஷாவுடன் ரவி மோகனுக்கு ஏற்பட்ட நட்பும் தான்.
ரவி மோகன் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடித்த பின்னர், கடந்த 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர், சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த ரவி மோகன், 15 ஆண்டுகளுக்கு பிறகு மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற போவதாக சமீபத்தில் அறிவித்தார்.

தற்போது இவர்களது விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் ரவி மோகன் தன்னுடன் ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்ட பாடகி கெனிஷா உடன் ஒரே நிற உடை அணிந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
ரவி மோகனின் இந்த செயலால் கடுப்பான ஆர்த்தி, 4 பக்க அறிக்கை வெளியிட்டு கணவர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதன் பின்னர் இரு தரப்பிலும் அறிக்கை மோதல் வெடித்த நிலையில்... தற்போது நீதிமன்றம் இவர்கள் இருவரும் எந்த ஒரு அறிக்கையும் வெளியிட கூடாது என தடை விதிக்கப்பட்டது. அதே போல் ரவி மோகன் ஆர்த்தி மற்றும் அவரின் அம்மா சுஜாதா தரப்பில் வெளியிட்ட அறிக்கையை நீக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி பிரச்சனை ஒரு பக்கம் புகைந்து கொண்டிருக்கும் நிலையில் , தற்போது ரவி மோகன் பாடகி கேனிஷாவுடன் குன்றத்தூர் முருகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். கோவில் அர்ச்சகர்களுடன் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் மாலையும் கழுத்துமாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த பிரச்சனை எங்கு போய் முடியப்போகிறதோ என்பதே தற்போது ரசிகர்களின் மைண்ட் வாய்சாக உள்ளது.






















