மேலும் அறிய

400 ஆண்டு கோட்டையில் என்னை தேசிய கொடியேற்ற வைத்த மக்களுக்கு நன்றி - ஸ்டாலின் நெகிழ்ச்சி! MK Stalin

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கொடியேற்றிய பிறகு பேசிய முதலமைச்சர். இது 75-வது சுதந்திர தினம் மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல வரலாற்றுச் சிறப்புமிக்க வருடம் எனக் குறிப்பிட்டார். மகாத்மாவை கதர் அணிந்த காந்தியாக வழியனுப்பி வைத்த பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு எனக் குறிப்பிட்டார். மேலும் சுதந்திரத் தியாகிகளுக்கான ஓய்வூதிய உயர்வு அவர்களது குடும்பத்துக்கான உதவித்தொகை உயர்வு குறித்தும் விழாவில் அறிவித்தார்.

‘400 ஆண்டுகள் பழமை கொண்ட இந்த கோட்டையில் இந்திய நாட்டின் இந்தக் கொடியை ஏற்ற ரத்தம் சிந்திய வீரர்களை வணங்குகிறேன். விண்ணூற்ற கொடியினை ஏற்றும் வாய்ப்பு தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. அனைவருக்கும் வணக்கம். கோட்டைக்கொத்தளத்தில் கொடியேற்றும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி.

சுதந்திர நாளில் யார் முதலமைச்சர் யாரோ அவர்தான் கொடியேற்ற வேண்டும் என்கிற வாய்ப்பை பெற்றுத்தந்தவர் கருணாநிதி. இந்தியாவின் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் உரிமை பெற்றுத்தந்த மாபெரும் சுதந்திர சிந்தனையாளர். ஏராளமான பெருமைகள் இந்த ஆண்டுக்கு உண்டு. தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா. நீதிக்கட்சியின் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான். மகாத்மா காந்தி கதர் ஆடை உடுத்தத்தொடங்கிய நூற்றாண்டு. வ.உ.சிக்கு 150வது பிறந்தநாளும் இந்த ஆண்டுதான். மகாகவி பாரதி மறைவின் நூறாண்டு. எத்தனையோ வரலாற்று நிகழ்வின் 100 ஆண்டு இந்த 2021. திமுக அரசின் 6வது முறை ஆட்சி. விடுதலைக்காகப் போராடிய மண் நமது தமிழ் மண். பூலித்தேவர்,வேலுநாச்சி, தீரன் சின்னமலை,மருது சகோதரர்கள், தில்லையாடி வள்ளியம்மை, தந்தைப்பெரியார், திருவி.க., சிங்காரவேலர், திருப்பூர் குமரன், ராஜாஜி, காமராஜர், ஜீவா, கேப்டன் லட்சுமி, மா.போ.சி,, கே.பி.சுந்தராம்பாள். இத்தகைய தமிழ்தியாகிகளின் ரத்தம் கொண்டு கட்டப்பட்டது இந்திய சுதந்திரத்தூண். நான் சொன்னவர்கள் தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவின் தியாகிகள். அவர்கள் குடும்பத்துக்கு உதவித்தொகை ரூ.17000 லிருந்து ரூ.18000ஆக உயர்த்தப்படும் குடும்ப ஓய்வுதியத்தொகை ரூ,8500லிருந்து ரூ.9000 ஆக உயர்த்தப்படும். சீனாவால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது இந்திய நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என நிதி திரட்டிக் கொடுத்தவர் அண்ணா. தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாகிஸ்தான் கண்டனத் தீர்மானம் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டது. பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன்னுக்கு கோட்டை, ராஜாஜி நினைவாலையம், வள்ளியம்மை நினைவு இல்லம், வ.உ.சி செக்கு நினைவுச்சின்னமானது, சிப்பாய் கலகத்துக்கு நினைவுத்தூன் என நாட்டுக்காக உழைத்தவர்களைப் போற்றுகிறோம். வ.உ.சி பிறந்தநாள் எழுச்சியுடன் கொண்டாட்டம். அரசியல் விடுதலை மட்டும் போதாது பொருளாதார விடுதலையும் வேண்டும் என வ.உ.சி. விரும்பினார். எல்லாருக்கும் எல்லாம் என உறுதி கொண்டது அரசு. கொரோனா மருத்துவ, மனநல நெருக்கடி, பொருளாதார நெருக்கடி என பல சிக்கல்களில் கொண்டு நிறுட்த்ஹிவிட்டது கொரோனா. மருத்துவப் பணியாளர்களைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். அரசின் 101வது நாள். வெள்ளை அறிக்கை, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளோம், இதில் கொரோனாவை மேலாண்மை செய்து காப்பாற்ற வேண்டியதிலும் வெற்றி கண்டிருக்கிறது. 14வது அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருட்கள் கொடுக்கப்பட்டது. ஆவின் விலை குறைப்பு. மகளிர் இலவசப் பேருந்துப் பயணம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம், தகைசால் தமிழர் விருது தலைவர் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 3கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலகத்தரத்தில் புதிய பன்னோக்கு மருத்துவமனை கிண்டி கிங் வளகாத்தில் அமைய உள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் தொடங்கப்பட்டுள்ளது. சமூகம் அறிவியல் பொருளாதாரத்தில் தமிழ்நாடு ஒருசேர வளரவேண்டும். அரசு, தனிமனித பொருளாதாரம் தன்னிறைவு மிக்கதாக வேண்டும். ஏற்றத்தாழ்வற்ற சமூகமாக மாற வேண்டும். இதைத்தான் நம் தியாகிகள் விரும்பினார்கள் அதற்குதான் போராடினார்கள். அத்தகைய தமிழ்நாட்டை உருவாக்க நினைக்கும் அரசுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கும் மகாத்மாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தென்னாப்பிரிக்காவில் காந்திக்கு உடனிருந்து உதவியவர்கள் தமிழர்கள். ஐரோப்பாவுக்கு எப்படி இத்தாலிய மொழியோ அப்படி இந்தியாவுக்குத் தமிழ். மதுரை வந்த மகாத்மாவை மேலாடை துறந்த கதராடை மகாத்மாவாக தமிழ்நாடு வழியனுப்பி வைக்கப்பட்டது. மதுரை காந்தி அருங்காட்சியகம் 6 கோடி செலவில் புதுப்பிக்கப்படும். அனைவருக்கும் சுதந்திர நாள் வாழ்த்துகள். வாழ்க தமிழ்நாடு! வாழ்க இந்தியா’ எனப் பேசி முடித்தார்.

அரசியல் வீடியோக்கள்

TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்
TVK Vijay : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
Embed widget