Anna University Issue | ‘'வீடியோ எடுத்து மிரட்டுனான்’’ பாதிக்கப்பட்ட மாணவி பகீர்!வெளியான FIR Report
மாணவருடன் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து தனது தந்தைக்கு அனுப்புவேன் எனவும், டீனிடம் காட்டி டிசி தர வைப்பேன் எனவும் அண்ணா பல்கலை பலாத்கார வழக்கு குற்றவாளி ஞானசேகரன் தன்னை மிரட்டியதாக பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் தனது ஆண் நண்பருடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்த மாணவியை வீடியோ எடுத்து மர்ம நபர்கள் இருவர் மிரட்டியுள்ளனர். மேலும் மாணவியுடன் இருந்த மாணவரை அடித்து விரட்டியதோடு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மாணவி அதற்கு உட்படாததால் அவரை கட்டாயப்படுத்தி வீடியோவை காட்டி மிரட்டியுள்ளனர். அப்போதும் மாணவி மறுப்பு தெரிவித்ததால் வலுக்கட்டாயமாக அப்பெண்ணை வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட அப்பெண் மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இந்த பலாத்கார வழக்கில் அந்த பகுதியில் பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே பாலியல் வழக்குகள் உட்பட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் அவர் சைதை கிழக்கு பகுதி திமுக மாணவர் அணி அமைப்பாளர் என்ற அதிர்ச்சி தகவலும் உதயநிதி, மா சு உடன் அவர் எடுத்த புகைப்படங்களும் வைரலாகி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் FIR வெளியாகியுள்ளது. அதில் அதிர்ச்சிகரமான சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
’’மாணவருடன் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து மாணவியின் தந்தைக்கு அனுப்புவேன் எனவும், டீன் ம்ற்றும் பேராசிரியர்களிடம் காட்டி டிசி தர வைப்பேன் என ஞானசேகரன் மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் எவ்வளவோ கெஞ்சியும் விடாமல் ஞானசேகரன் தன்னை துன்புறுத்தியதாக மாணவி புகாரில் குறிப்பிட்டுள்ளார்.