Rajinikanth about Mk Stalin : "என்னுடைய நண்பன் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்" ரஜினி MASS பேட்டி
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றிபெற்றதற்கும், மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கப் போகும் நரேந்திர மோடி அவர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள்
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதன்படி தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரி உட்பட மொத்தம் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் பேட்டி:
பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள என்னுடைய அருமை நண்பர், முதலமைச்சருக்கு ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு வாழ்த்துக்கள்.
மற்றொரு நண்பர் சந்திரபாபு நாயுடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார் அவருக்கும் என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
NDA ஆட்சி அமைக்க இருக்கிறது. மூன்றாவது முறையாக மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்க இருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
டெல்லியில் பதவி ஏற்பு நிகழ்வுக்கு செல்வதற்கு குறித்து முடிவெடுக்கவில்லை.
ரிஷிகேஷ், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றேன். அருமையாக இருந்தது. ஒரு முறையும் ஒரு புது அனுபவம் கிடைக்கிறது.