மேலும் அறிய

Gold Rate: போற போக்க பாத்தா, இறங்க வாய்ப்பில்ல போலயே.?!! உச்சியிலேயே இருக்கும் தங்கம் விலை...

Gold Rate Increase: கடந்த ஒரு வாரமாக 64 ஆயிரம் ரூபாயை தாண்டியே விற்பனையாகிவரும் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக 64 ஆயிரம் ரூபாயை தாண்டியே விற்பனையாகிவரும் நிலையில், இன்றும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது. போகிற போக்கை பார்த்தால், தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை போல தெரிவதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.

ரூ.64,000-ஐ தாண்டியே விற்பனையாகிவரும் தங்கம்

கடந்த 19-ம் தேதி சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை, சவரன் 64 ஆயிரம் ரூபாயை தாண்டி, 64,280 ரூபாய்க்கு விற்பனையானது. அதே நேரம், ஒரு கிராம் தங்கத்தின் விலையும் முதன் முறையாக 8,000 ரூபாயை தாண்டி 8,035 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாளே, அதாவது 20-ம் தேதி, சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்ச விலைக்கு சென்ற தங்கம் 64,560 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து, 21-ம் தேதி 64,200 ரூபாய்க்கு இறங்கிய தங்கத்தின் விலை, 22-ம் தேதி மீண்டும் உயர்ந்து, 64,360 ரூபாய்க்கு சென்றது. அதற்கு அடுத்த நாளான நேற்று அதே விலையில் நீடித்த தங்கத்தின் விலை, இன்று(24.02.25) மீண்டும் உயர்ந்துள்ளது.

மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை, 64,440 என்ற இரண்டாவது உச்சபட்ச விலையை தொட்டுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை, 8,055 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 19-ம் தேதியிலிருந்து 64,000 ரூபாயை தாண்டியே விற்பனையாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதே நிலை நீடித்தால், தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டுமே தவிர, 64 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் விலை குறையாதோ என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது.

ரூ.100-ஐ தாண்டி நீடிக்கும் வெள்ளி விலை

இதேபோல், வெள்ளியின் விலையும் 100 ரூபாயை தாண்டியே நீடித்து வருகிறது. ஜனவரி மாதத்திலேயே 100 ரூபாயை தாண்டிவிட்ட வெள்ளியின் விலை, இன்று வரையிலும் அதை தாண்டியே விற்பனையாகிவருகிறது. கடந்த 15-ம் தேதி 108 ரூபாயாக இருந்த ஒரு கிராம் வெள்ளியின் விலை, 20, 21 தேதிகளில் 109 ரூபாய்க்கு சென்று, 22-ம் தேதி மீண்டும் 108 ரூபாய்க்கு திரும்பியது. அதன்பின் அதே விலையில் நீடிக்கும் வெள்ளி, இன்றும் ஒரு கிராம் 108 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது.

தங்கத்தின் விலை 64 ஆயிரத்தை தாண்டியும், வெள்ளியின் விலையும் 100 ரூபாயை தாண்டியும் சென்றுவிட்ட நிலையில், தொடர்ந்து உயர்ந்து வருவதால், இவை இரண்டின் விலையும் எந்த அளவிற்கு உச்சம் தொடுமோ என தங்கம் வாங்குவோர் அச்சமடைந்துள்ளனர்.

 

தலைப்பு செய்திகள்

Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
LIVE | Kerala Lottery Result Today (04.08.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் இன்று குலுக்கல்; கோடிகளை வெல்வது யார்?
LIVE | Kerala Lottery Result Today (04.08.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் இன்று குலுக்கல்; கோடிகளை வெல்வது யார்?
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
How To Save ₹100 Every Day: ஒரு நாளுக்கு 100 ரூபாய் சேமித்தால் நிதி எதிர்காலம் எப்படி மாறும்? - : கோடீஸ்வரர் ஆகும் ரகசியம் இதுதான்!
ஒரு நாளுக்கு 100 ரூபாய் சேமித்தால் நிதி எதிர்காலம் எப்படி மாறும்? - : கோடீஸ்வரர் ஆகும் ரகசியம் இதுதான்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Embed widget