PM Modi with pawan kalyan: காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!
டெல்லி முதல்வர் பதவியேற்பு விழாவில் மற்ற மாநில முதலமைச்சர்கள் எல்லோருக்கும் வணக்கம் மட்டும் சொல்லி விட்டு, பவன் கால்யாணை பார்த்த உடன் பிரதமர் மோடி கட்டித்தழுவி சிறிது நேரம் பேசினார். அப்படி இருவரும் மேடையில் என்ன பேசினார்கள் என்று தொண்டர்கள் குழம்பிபோன நிலையில், பவன் கல்யாணிடம் மோடி கூறியது என்ன என்பது தொடர்பான ருசிகர தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதன்படி, அம்மாநில முதலமைச்சராக ரேகா குப்தா டெல்லி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று முன் தினம் முதல்வர் பதவியேற்பு விழா டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு வந்த பிரதமர் மோடி மேடையில் கூடியிருந்த பாஜக முதலமைச்சர்களுக்கு எல்லாம் வணக்கம் சொல்லி விட்டு நகர்ந்தார். ஆனால், பவண் கல்யாணை பார்த்த உடன் சற்று நேரம் அங்கேயே நின்று பேசினார். மோடி பேச பேச பவன் கல்யாண் குலுங்கு சிரித்தார். பவண் கல்யாணிடம் மோடி அப்படி என்ன தான் கேட்டார் என்று தொண்டர்கள் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பினார்கள். இந்த நிலையில் தான் மேடையில் என்ன நடந்தது என்று பவண்கல்யாணே தற்போது சுவாரஸ்ய தகவலை சொல்லி இருக்கிறார்.
”வேற ஒன்னும் இல்லங்க.. என்ன பாத்து 'என்ன பவன் நீங்க இமயமலைக்கு போகப்போறீங்களா?' என பிரதமர் சிரித்துக் கொண்டே கேட்டார். அதற்கு நான் 'இல்லை' என்றேன். பிறகு அவர், அங்கு செல்ல இன்னும் வயசு இருக்கு . நீங்க மக்கள் சேவையில் கவனம் செலுத்துங்கள்னு அறிவுறுத்தினார்" என்று சொல்லி இருக்கிறார் பவன். பவணின் தொண்டர்கள் இப்போது இந்த வீடியோவிற்கு தான் பயர் விட்டுக்கொண்டிருக்கின்றனர்.





















