ஜெயலலிதா நாமம் வாழ்க! – வேதா இல்லத்தில் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று அவரது உருவ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று அவரது உருவ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜெயலலிதா இல்லாவிட்டாலும் அவரது நினைவு அனைவரது மனதிலும் நிலைத்து நிற்கும். இதற்கு முன்பு மூன்று முறை வேதா இல்லத்திற்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்தித்துள்ளேன். ஜெயலலிதா நாமம் வாழ்க” எனத் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழாவை அதிமுகவினர் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஜெயலலிதாவின் புகழ் பாடி வருகின்றனர்.
அந்த வகையில், ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
கடந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட செங்கோட்டையன் இந்த முறை ஈரோடு பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதேபொல் தங்கமணியும் நாமக்கல் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் கல்ந்து கொண்டார்.
அதேபோல் சென்னை காமராஜர் சாலையில் உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜெயலலிதா இருந்தவரை கட்சியை எந்தளவுக்கு நிலைநிறுத்தினார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்கு பின்னால் நடைபெற்ற அரசியல், சூது, சூழ்ச்சி, நம்பிக்கை துரோகம் இதெல்லாம் யாரால் அரங்கேற்றப்பட்டது என்பதும் எல்லோருக்கும் தெரியும். இதனால், நடைபெற்ற 11 தேர்தல்களிலும் தோல்வியை தான் சந்தித்தது. இதற்கு எல்லாம் காரணம், ஒற்ற தலைமை தான் வேண்டும் என்று அடம்பிடித்து அதை ஏற்றுக்கொண்டவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். தொண்டர்களுடைய விருப்பம் கட்சி இணைய வேண்டும் என்பது தான். தொண்டர்களின் எண்ணம் ஈடேற வேண்டும் என்பதற்காக தான் நாங்களும் தர்ம யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

