IPL 2025 Fan Parks: ஐபிஎல் ஃபேன் பார்க் - எங்கு, எப்போது? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் அமையும்? டிக்கெட் விலை
IPL 2025 Fan Parks: நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான ஃபேன் பார்க்குகள், எப்போது? எங்கு? அமையும் என்பது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

IPL 2025 Fan Parks: நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான ஃபேன் பார்க்குகள், தமிழ்நாட்டில் எங்கு அமைகின்றன?டிக்கெட் கட்டணம் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஐபிஎல் ஃபேன் பார்க்:
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் நாளை தொடங்கி வரும் மே 25ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கான விருந்தாக இது அமைய உள்ளது. இதனை நேரில் காண ரசிகர்கள் மைதானங்களில் குவிய உள்ளனர். இதனால் அரங்கங்கள் நிரம்பியிருப்பது வழக்கமான அம்சமாக இருந்தாலும், கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் ஐபிஎல் ஃபேன் பார்க்குகள் எடுத்துக்காட்டுகின்றன. ஐபிஎல் ஃப்பென் பார்க்குகள் மூலம் அடுத்த பத்து வாரங்களுக்கு பல்வேறு நகரங்களைச் சேர்ந்த ரசிகர்களுக்கு, போட்டியை மைதானத்தில் இருந்தே பார்ப்பதை போன்ற அனுபவத்தை வழங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தயாராகி வருகிறது.
வீக் எண்ட் கொண்டாட்டம்:
கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, ஐபிஎல் ஃபேன் பார்க்குகள் மைதானத்திற்கு வர முடியாத ரசிகர்களுக்கு போட்டியை நேரில் பார்ப்பது போன்ற அனுபவத்தை வழங்குகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் ஐபிஎல் ஃபேன் பார்க்குகள் வார இறுதி நாட்களில், அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமைக்கப்பட உள்ளன. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதும் வரும் முதல் வார இறுதியில் ஐந்து நகரங்களில்ஃபேன் பார்க்குகள் அமைக்கப்பட உள்ளன. அதன் பிறகு ஒவ்வொரு வார இறுதியில் வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் ஐந்து ஃபேன் பார்க்குகள் அமைக்கப்படும்.
ஃபேன் பார்க் எண்ட்ரி டைம்:
போட்டி நேரத்தைப் பொறுத்து, இரண்டு போட்டிகள் நடைபெறும் நாட்களில் இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கும், ஒரு போட்டி நடைபெறும் நாட்களில் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கும் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர்.
ஐபிஎல் ஃபேன் பார்க் டிக்கெட் விலை:
நுழைவு இலவசம். இருப்பினும், நேரடி திரையிடல்கள், இசை, பொழுதுபோக்கு, உணவு மைதானங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு மண்டலங்கள் மற்றும் மெய்நிகர் பேட்டிங், பந்துவீச்சு பயிற்சி, replica dugouts, cheer-o-meter, சியர்-ஓ-மீட்டர் மற்றும் 360° புகைப்பட அரங்குகள் போன்ற பொழுதுபோக்கு செயல்பாடுகளை அனுபவிக்க ரசிகர்கள் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
ஐபிஎல் ஃபேன் பார்க் - தமிழ்நாட்டில் எங்கு? எப்போது?
1.வார இறுதி 1 – மார்ச் 22 & 23
- ஹரியானா - ரோஹ்தக்
- ராஜஸ்தான் - பிகானேர்
- சிக்கிம் - காங்டாக்
- கேரளா - கொச்சி
- தமிழ்நாடு - கோயம்புத்தூர்
2. வார இறுதி 2 – மார்ச் 29 & 30
- மத்தியப் பிரதேசம் - குவாலியர்
- ராஜஸ்தான் - ஜோத்பூர்
- அசாம் - டின்சுகியா
- கேரளா - பாலக்காடு
- தமிழ்நாடு - திருநெல்வேலி
3. வார இறுதி 3 - ஏப்ரல் 5 & 6
- உத்தரப்பிரதேசம் - மதுரா
- குஜராத் - ராஜ்கோட்
- நாகாலாந்து - திமாபூர்
- தெலுங்கானா - நிஜாமாபாத்
- தமிழ்நாடு - மதுரை
4. வார இறுதி 4 - ஏப்ரல் 12 & 13
- உத்தரபிரதேசம் - மீரட்
- குஜராத் - நதியாட்
- திரிபுரா - அகர்தலா
- மகாராஷ்டிரா - நாக்பூர்
- கர்நாடகா - மைசூரு
5. வார இறுதி 5 - ஏப்ரல் 19 & 20
- பஞ்சாப் - பதிண்டா
- குஜராத் - சூரத்
- அசாம் - தேஜ்பூர்
- மகாராஷ்டிரா - சோலாப்பூர்
- புதுச்சேரி - காரைக்கால்
6. வார இறுதி 6 – ஏப்ரல் 26 & 27
- பஞ்சாப் - அமிர்தசரஸ்
- மத்திய பிரதேசம் - போபால்
- மேற்கு வங்காளம் - ராய்கஞ்ச்
- மகாராஷ்டிரம் - கோலாப்பூர்
- கர்நாடகா - துமகுரு
7. வார இறுதி 7 – மே 3 & 4
- இமாச்சலப் பிரதேசம் - ஹமிர்பூர்
- ராஜஸ்தான் - கோட்டா
- பீகார் - முசாபர்பூர்
- கர்நாடகா - பெலகாவி
- தமிழ்நாடு - திருச்சிராப்பள்ளி
8. வார இறுதி 8 – மே 10 & 11
- இமாச்சலப் பிரதேசம் - உனா
- மத்தியப் பிரதேசம் - ஜபல்பூர்
- ஜார்க்கண்ட் - தன்பாத்
- மகாராஷ்டிரம் - ரத்னகிரி
- ஆந்திரப் பிரதேசம் - விஜயவாடா
9. வார இறுதி 9 – மே 17 & 18
- உத்தரப் பிரதேசம் - ஆக்ரா
- சத்தீஸ்கர் - பிலாய்
- மேற்கு வங்காளம் - மன்பூம் (புருலியா)
- கர்நாடகா - மங்களூரு
- தெலங்கானா - வாரங்கல்
10. வார இறுதி 10 – மே 23 & 25
- உத்தரப் பிரதேசம் - காஜிபூர்
- ஒடிசா - ரூர்கேலா
- ஜார்கண்ட் - ஜாம்ஷெட்பூர்
- கோவா - கோவா
- ஆந்திரப் பிரதேசம் - காக்கிநாடா
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

