மேலும் அறிய

பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!

Rameshwaram New Pamban Bridge : ராமேசுவரம் தீவை இணைக்கும் புதிய செங்குத்து பாம்பன் பாலத்தின் கட்டுமான பணி நிறைவடைந்து உள்ளதாகவும், பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

New Pamban Bridge Inauguration: ராமேசுவரம் தீவையும் மற்றும் மண்டபத்தையும் இணைக்கும் புதிய பாம்பன் தூக்கு பாலத்தின், அனைத்துகட்ட பணிகளும் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த பாலமானது, அடுத்த மாதம் ஏப்ரலில் திறக்கப்படவுள்ளதாகவும், இதை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த தருணத்தில், புதிய பாம்பன் பாலத்தின் சிறப்பம்சங்கள் குறித்தும், அதன் ஆச்சர்யமூட்டும் ட்ரோன் காட்சிகளையும் கண்டு ரசியுங்கள்.

புதிய பாம்பன் ரயில் பாலம்:

பாம்பன் புதிய ரயில் பாலமானது,  மண்டபம் நகரத்தையும் ராமேஸ்வரம் தீவத்தையும் இணைக்கிறது. இது சுமார் 2 கிலோமீட்டர் நீளம் கொண்டது என கூறப்படுகிறது. பழைய ரயில் பாலத்தின் கட்டுமானங்கள் கட்டுபட்டு பல ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, புதிய ரயில் பாலம் கட்டமைக்க தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய ரயில் பாலத்தின் கட்டுமானமானது, கடந்த 2020ல் தொடங்கப்பட்டது. ​

கொரோனா தொற்று உள்ளிட்டவைகளால், கட்டுமானத்தில் சற்று தாமதமானாலும், 2024ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. இதையடுத்து பல்வேறு சோதனைகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டு, தற்போது சரிசெய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. 

பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!

திறந்து வைக்கும் பிரதமர் மோடி?

புதிய பாலத்தின் திறப்பு விழாவானது, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற திட்டமிடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார் என்று கூறப்பட்டது. எனினும், சில காரணங்களால் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, புதிய பாம்பன் பாலத்தின் சில பிரச்னைகள் அனைத்து சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், இந்த புதிய பாலமானது, அடுத்த மாதம் ஏப்ரலில் , இன்னும் 2 வாரங்களில் திறக்கப்படவுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதன் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று திறப்பு வைப்பார் என்றும் கூறப்படுகிறது. 

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் இடையே இந்தியாவின் முதல் கடலுக்கு மேல் அமைந்த ரயில் பாலமான பாம்பன் பாலம் 1914 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. காலப்போக்கில் பழைய பாலம் பயன்பாடுக்கு தகுதியற்றதாக மாறியதால், இந்திய அரசு புதிய ரயில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

ஏ.என்.ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ள ட்ரோன் காட்சிகள்:

புதிய பாலத்தின் சிறப்பம்சங்கள்

  • செங்குத்து தூக்குதல் (Vertical Lift) அமைப்பு: புதிய பாம்பன் ரயில் பாலமானது, செங்குத்தாக தூக்கிக்கொள்ளும் திறனைக் கொண்ட முதல் இந்திய ரயில் பாலமாகும். இது பெரிய கப்பல்கள் கடந்து செல்ல வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, இரண்டு பகுதியிலும் உள்ள தளவாடங்கள் தனியாக பிரிந்து மேலே தூக்கி செல்லும் வகையில் இருந்தது
  • நீளம்:  இப்பாலத்தின் நீளமானது 2.07 கிலோமீட்டர் என கூறப்படுகிறது. 
  • தூண்கள்: மொத்தம் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு தூண்கள்  இடம்பெற்றுள்ளன.
  • நவீன தொழில்நுட்பம்: பாலத்தின் இயக்கம் மற்றும் பாதுகாப்பு முறைகள் கணினி வழியாக கட்டுப்படுத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Also Read: ஹைப்பர்லூப் ரயில் ரெம்ப ஸ்பீடா இருக்கும்! சென்னை ஐஐடி_க்கு நிதி ஒதுக்கீடு- ரயில்வே அமைச்சகம் அப்டேட்

Also Read: பக்கிங்காம் கால்வாய் திட்டத்திற்கு நிதி- மத்திய அரசு சொன்னது என்ன?

பயன்பாடுகள்:

இப்பாலமானது, ராமேஸ்வரம் தீவையும் மண்டபத்தையும் இணைக்கிறது. இதனால் ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் விரைவாக பயணிக்க முடியும். ரயில் பயணம் மூலம் , வெளி மாநிலத்தில் வரும் பக்தர்கள் நேரடியாக ராமேசுவரத்திற்குச் செல்ல முடியும். இதனால், இராமேசுவரத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். மேலும் பொருளாதார வளர்ச்சியானது அப்பகுதி மக்களுக்கும் மட்டுமன்றி மாநிலங்கள் மற்றும் இந்திய நாட்டின் பொருளாதார பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும் .

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
ABP Premium

வீடியோ

’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Embed widget