Sikandar Trailer Review : டயலாக் பேச சொன்னா ஒப்பிக்கிறாரே... சல்மான் கான் நடித்துள்ள சிகந்தர் பட டிரைலர் ரிவியு
Sikandar Trailer Review : ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் நடித்து இந்தியில் உருவாகியுள்ள சிகந்தர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது

சிகந்தர் டிரைலர்
தமிழில் மதராஸி படத்தை இயக்கி வரும் முருகதாஸ் அதே சமயத்தில் இந்தியில் இயக்கியுள்ள படம் சிகந்தர். சல்மான் கான் , ராஷ்மிகா மந்தனா , காஜல் அகர்வால் , சத்யராஜ் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வரும் மார்ச் 30 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சிகந்தர் பட டிரைலர் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்
#SikandarTrailer OUT NOW🔥 https://t.co/XYA07aKPQb #Sikandar releases in theatres near you on 30th March 2025 #SajidNadiadwala’s #Sikandar
— Salman Khan (@BeingSalmanKhan) March 23, 2025
Directed by @ARMurugadoss @iamRashmika #Sathyaraj @TheSharmanJoshi @MsKajalAggarwal @prateikbabbar #AnjiniDhawan @jatinsarna…
சிகந்தர் டிரைலர் ரிவியு
தமிழில் முருகதாஸ் இயக்கிய சர்கார் படத்தின் இந்தி ரீமேக் தான் சிகந்தர் என சில தகவல்கள் வெளியாகின. ஆனால் இது எந்த படத்தின் ரிமேக்கும் இல்லை என படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் முருகதாஸின் மற்ற படங்களில் இருக்கும் அம்சங்கள் இந்த படத்திலும் இருப்பதை இந்த டிரைலரில் பார்க்கலாம். அரசியல் களத்தை மையமாக வைத்து நகரும் கதை. ஏழைகளின் பக்கம் நின்று போராடும் நாயகன் போன்ற முருகதாஸ் பட டெம்பிளேட்கள் இந்த படத்திலும் இருக்கின்றன. அன்பான மனைவியாக வரும் ராஷ்மிகா மந்தனா அனேகமாக வில்லன்களால் கொல்லப்பட்டபின் காஜல் அகர்வால் எண்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கலாம். அதிகார பலம் கொண்ட வில்லனாக வரும் சத்யராஜ் ஒருவர் தான் இந்த டிரைலரில் கவனத்தை ஈர்க்கிறார்.
சல்மான் கான் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி ஏகபட்ட பஞ்ச் டயலாக் மற்றும் சண்டைக்காட்சிகள் படத்தில் கொட்டி கிடக்கின்றன. எல்லா வசனங்களையும் எந்த வித வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி ஒப்பிக்கிறார் சல்மான் கான். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை பக்கா பேக்கேஜாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். மற்றபடி குறிப்பிட்டு சொல்லும்படியான எந்த அம்சமும் இந்த டிரைலரில் இல்லை.





















